டெல்லி: பாரம்பரிய அடையாளம் உள்ளதால் மட்டுமே ஜல்லிக்கட்டு போட்டிகளை அனுமதித்து விட முடியுமா என தமிழக அரசின் வாதம் மீது உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழர்களின் வீர விளையாட்டாகக் கருதப்படும் ஜல்லிக்கட்டு போட்டியில் காளைகள் பயன்படுத்தப்படுவதை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், விலங்குகள் நல ஆர்வலர்கள் தொடர்ந்த வழக்கில், அப்போட்டிக்குத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு (2016) மே மாதம் 7-ம் தேதி தீர்ப்பளித்தது. இதனையடுத்து, தமிழக முதல்வர் ஜல்லிக்கட்டு நடைபெற அவசர சட்டம் பிறப்பிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். மத்திய அரசும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி வழங்கி அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில், ஜல்லிக்கட்டை நடத்த அனுமதிக்கும் வகையில், கடந்த ஜனவரி 7-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் புதிய உத்தரவு பிறப்பித்தது. இந்த உத்தரவை எதிர்த்து விலங்குகள் நல வாரியம், பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தன. இதையடுத்து, ஜல்லிக்கட்டு போட்டி நடத்த இடைக்கால தடை விதிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கு வழக்கு இன்று நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, நாரிமன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சேகர் நபதே வாதாடினார். மேலும், 22 பக்கம் கொண்ட பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜல்லிக்கட்டு கலாசார மற்றும் மத ரீதியான பண்டிகையாக கொண்டாடப்படுகிறது என்றும், அதை பாரம்பரிய நடைமுறை என்ற அடிப்படையில் அனுமதிக்க வேண்டும் கூறப்பட்டுள்ளது.
ஜல்லிக்கட்டு போட்டியானது சிந்து சமவெளி காலத்திலேயே இருப்பதற்கான தடயங்கள் இருப்பதுள்ளது. அதற்காக தடயங்கள் இருப்பதும் உறுதிபடுத்தப்பட்டுள்ளன. கடவுள் கிருஷ்ணா, மாடுகளை அடக்கியதாக கூறப்படும் இதிகாசங்கள் சுட்டிக்காட்டப்பட்டது.
கலாச்சார, பாரம்பரியம் என்ற பெயரில் விலங்குகள் கொல்லப்படுவதற்கு அரசியலமைப்பு அனுமதிக்கிறது. ஆனால், ஜல்லிக்கட்டு மட்டும் ஏன் சட்டத்திற்கு விரோதமானதாக கருதப்படுகிறது. பிரான்ஸ் உள்ளிட்ட 8 நாடுகளில் காளைச் சண்டை நடத்தப்படுகிறது. அதில் கொடூரமாக காளைகள் கொல்லப்படுகின்றன. அதை அந்நாட்டு அரசுகள் சட்ட விரோதமானதாக கருதவில்லை.
ஜல்லிக்கட்டு ஒரு வீர விளையாட்டு, அதில் இளைஞர்கள் பாரம்பரியமாக அதில் பங்கெடுத்து வருகின்றனர். காளைகள் மாட்டிறைச்சிக்காவும் வளர்க்கப்படுகிறது. குறிப்பிடும் படியாக காளையானது ஜல்லிக்கட்டின் போது 30 நொடிகளே களத்தில் இருக்கும், கிராமப் புறங்களில் ஜல்லிக்கட்டுக் காளைகள் வளக்கப்படுவதால், அவை அச்சமடைவதில்லை.
இது குறித்து கருத்து தெரிவித்த நீதிபதிகள் கூறியதாவது: 1899-ம் ஆண்டு 12-வயதுக்கு கீழ் உள்ள சிறுமிகள் சுமார் 10,000 பேருக்கு குழந்தைத் திருமணம் நடைபெற்றது. அப்போது அதனால் அவற்றை பாரம்பரியமாக கருதி, தற்போது அவற்றை அனுமதிக்க முடியுமா? என கேள்வி எழுப்பினர். மேலும், வழக்கு குறித்த இறுதி விசாரணையை ஆகஸ்ட் 23-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
ஜல்லிக்கட்டு நடப்பதில் தவறு ஒன்றும் கிடையாது. காளைகள் எந்த விதத்தில் ஆவது துன்புறுத்தப்பட்டால் கடுமையான தண்டனைகள் கொடுக்கப்படவேண்டும். ஸ்பானிய நாட்டில் நடக்கும் காளை சண்டை போல் ஜல்லிக்கட்டு கிடையாது. அத்துடன் காளைகளுக்கு சாராயம் போன்ற போதை பொருள் கொடுக்கப்பட்டிருக்கக்கூடாது. மருத்துவர்கள் அதனை உறுதி செயய்ய வேண்டும். காளைகளை ஓட விட்டு பிடிப்பதில் எந்த தவறும் இல்லை. நம்மவர்கள் மாடுகளையும் காளைகளையும் நன்றாகவே பராமரிக்கின்றனர்– ஆகவே ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட வேண்டும். வடக்கத்தியவன்களுக்கு- விசாரணை செய்பவன்களுக்கு இது புரிந்து இருக்க வேண்டும்.