சசிபெருமாளின் முதலாம் ஆண்டு நினைவு தினம்

SASI_PERUMALசேலம் மாவட்டம், இளம்பிள்ளை அருகே உள்ள இடங்கணசாலை மேட்டுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் காந்தியவாதி சசிபெருமாள். இவர் தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டார். இவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் பகுதியில் டாஸ்மாக் கடையை மூட வலியுறுத்தி செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய போது மரணம் அடைந்தார்.

இதையடுத்து அவருடைய உடல் சொந்த ஊரான இ.மேட்டுக்காட்டில் அடக்கம் செய்யப்பட்டது. நேற்று முதலாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவருடைய வீட்டின் அருகே வைக்கப்பட்டு இருந்த உருவப்படம் மற்றும் அவருடைய நினைவிடத்தில் உறவினர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், அரசியல் கட்சி பிரமுகர்கள் மலர் தூவியும், மாலை அணிவித்தும் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில், அவருடைய மனைவி மகிழம், மகன்கள் விவேக், நவநீதன், மகள் கவியரசி, மற்றும் சசிபெருமாளின் சகோதரர்கள் வெங்கடாசலம், செல்வம் ஆகியோர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், கண்ணீர் விட்டு கதறி அழுதனர்.

-http://www.nakkheeran.in

TAGS: