டெல்லியில் கடந்த 2012ஆம் ஆண்டு முதல் நாள் ஒன்றுக்கு சராசரியாக 4 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான டெல்லி போலீசாரின் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளில் பாலியல் பலாத்கார வழக்குகள் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. 2012ஆம் ஆண்டு 706 வழக்குகளும், 2013ல் 1636 வழக்குகளும், 2014ல் 2166 வழக்குகளும், 2015ல் 2199 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடந்த 15 ஆண்டுகளை பொறுத்தவரை பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 6 மடங்கு உயர்ந்துள்ளது. பெண்களுக்கு எதிரான தாக்குதல் வழக்குகள், வரதட்சனை உள்ளிட்ட குடும்ப ரீதியான தாக்குதல் வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என போலீசார் தெரிவித்துள்ளனர்.
போலீசாரின் இந்த அறிக்கை அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான டெல்லி அரசுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
– http://www.nakkheeran.in