ஷாக் ட்ரீட்மென்ட், சொத்து அபகரிப்பு, குழந்தைகள் சித்ரவதை: ஈஷா யோகா மையம் மீது குவியும் புகார்கள்

jakkiகோவை: கோவையில் உள்ள ஈஷா யோகா மையம் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்து குவிகின்றன. இது யோகா மைய ஆதரவாளர்களை கவலை அடைய வைத்துள்ளது.

கோவையில் ஜக்கி வாசுதேவ் நடத்தும் ஈஷா யோகா மையம் மீது அடுத்தடுத்து புகார்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளன. கோவையை சேர்ந்த பேராசிரியர் காமராஜ் தனது 2 மகள்களை ஜக்கி வாசுதேவ் சன்னியாசியாக்கிவிட்டார் என்று புகார் தெரிவித்தார்.

இதையடுத்து யோகா மையத்தால் பாதிக்கப்பட்டோர் துணிந்து புகார்கள் அளித்து வருகிறார்கள்.

மகனை மீட்டுத் தாருங்கள் ஈஷா யோகா மையத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள தனது மகன் அரிகரனை மீட்டுக் கொடுக்குமாறு தூத்துக்குடியை சேர்ந்த தமிழ்செல்வி என்பவர் கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

ஈஷா சமஸ்கிருத பள்ளியில் படிக்கும் குழந்தைகளை தோப்புக் கரணம் போடச் செய்வது, கழிவறையை சுத்தம் செய்யச் சொல்வது, மாட்டுச் சானத்தை அள்ளச் செய்வது, பைத்தியமாக்குவது என கொடுமைப்படுத்துவதாக மதுரையை சேர்ந்த போலீஸ் ஏட்டு மகேந்திரன் தெரிவித்தார்.

யோகா மையத்திற்கு வரும் பெண்கள் மூளைச் சலவை செய்யப்படுவதாக அந்த மையத்தில் ஒருங்கிணைப்பாளராக இருந்த செந்தில் குமாரே தெரிவித்திருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மையத்திற்கு வரும் பணக்காரர்களை அங்கேயே தங்க வைத்து அவர்களின் சொத்துக்களை அபகரிப்பதற்காக சிலர் பணியாற்றி வருவதாக செந்தில் குமார் மேலும் தெரிவித்துள்ளார்.

ஈஷா யோகா மையம் மீது அவதூறு பரப்புவோர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி தன்னார்வலர்கள் கோவை மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் யோகா மையம் குறித்து அவதூறு செய்தி வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

tamil.oneindia.com

TAGS: