பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்து விட்டு பஞ்சாபைச் சேர்ந்த இளம் விளையாட்டு வீராங்கனை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பூஜா (20) என்ற இளம் பெண் பஞ்சாபின் பாட்டியாலாவில் உள்ள கால்சா கல்லூரியில் 2ம் ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார். இவர் தேசிய அளவிலான கைப்பந்து வீராங்கனை ஆவார்.
ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால் பூஜாவுக்கு கடந்த ஆண்டு கல்லூரி நிர்வாகம் இலவசமாக தங்கும் விடுதி மற்றும் உணவு வசதி வழங்கப்படும் என்று உறுதியளித்து கல்லூரியில் சேர்த்துக் கொண்டது.
ஆனால் இந்த வருடம் கல்வியில் அவருடைய செயல்பாடு திருப்தி அளிக்கவில்லை எனக் கூறி இலவச தங்கும் விடுதி சேவையை வழங்கவில்லை. இதனால் பூஜா வீட்டில் இருந்து கல்லூரிக்கு செல்லும் நிலை உண்டானது. அதற்கு செலவும் அதிகமாக ஆனது.
பூஜாவின் தந்தை அப்பகுதியில் காய்கறி விற்பனை செய்பவர். அவரால் தினமும் இந்த செலவை எதிர்கொள்ள முடியவில்லை. இதனால் மனமுடைந்த பூஜா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தன் உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.
பூஜாவின் 4 பக்க தற்கொலை கடிதத்தில் தன்னுடைய பயிற்சியாளரே தன்னுடைய தற்கொலைக்கு காரணம் என்று கூறி உள்ளார்.
மேலும், சமூதாயத்தில் என்னை போன்று உள்ள பிற பெண்களுக்கு தேவையான கல்வி வசதிகளை பிரதமர் மோடி உறுதிசெய்ய வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.
-http://news.lankasri.com
இதுதான் இந்தியாவின் உண்மை நிலை. வெட்கக்கேடு.