டெல்லி: சவுதியில் கொடுக்கப்படாத சம்பளத்திற்காக காத்திருக்காமல், உடனடியாக இந்தியா திரும்புமாறு சவுதியில் உள்ள இந்தியர்களை மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ் கேட்டுக் கொண்டுள்ளார்.
கச்சா எண்ணெய்யின் விலை கடும் வீழ்ச்சியடைந்ததால் சவுதி அரேபியாவில் பல எண்ணெய் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன. இதனால் அங்கு பணிபுரிந்து வந்த 10 ஆயிரம் இந்தியர்கள் பாதிக்கப்பட்டார்கள். இவர்களில் 3172 பேர் சம்பளம் பெற்றுக் கொண்டுதான் நாடு திரும்புவோம் என்று கூறியிருந்தனர்.
இந்நிலையில், வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா சுவராஜ், சவுதி அரேபியாவில் உள்ள சம்பளப் பிரச்சனை இப்போதைக்கு தீராது என்றும் சம்பளத்திற்காக காத்திருக்காமல் இந்தியா திரும்புகள் என்று அறிவித்துள்ளார். சவுதியில் இருந்து இந்தியர்கள் நாடு திரும்புவதற்கான அனைத்து செலவுகளையும் இந்திய அரசு ஏற்கும் என்றும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார்.