தமிழக மீனவர்களின் 130 படகுகளை ஒருபோதும் விடுவிக்க முடியாது: இலங்கை அமைச்சர் கொக்கரிப்பு

amaraveeraயாழ்ப்பாணம்: இலங்கை கடற்படையால் கைப்பற்றப்பட்ட தமிழக மீனவர்களின் 130 படகுகளை ஒருபோதும் விடுவிக்கவே முடியாது என்று இலங்கை அமைச்சர் மகிந்த அமரவீர திட்டவட்டமாக கூறியுள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற மீனவர்களுடான ஆலோசனைக் கூட்டத்தில் இலங்கை கடல் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர பேசியதாவது:

இலங்கை கடற்பகுதிக்குள் சட்டவிரோதமாக மீன் பிடிக்கும் இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும் அவர்களின் படகுகள், மீன்பிடி சாதனங்கள் விடுவிக்கப்படவில்லை. இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட இந்திய மீனவர்களின் 130 படகுகளை விடுவிக்க முடியாது.

இலங்கை கடல் பகுதியில் வரும் 25-ந் தேதி முதல் இழுவை படகுகளில் மீன்பிடிக்க தடை செய்யப்படுகிறது. இதனை மீறும் மீனவர்கள் கைது செய்யப்படுவதோடு அவர்களின் மீன்பிடி அனுமதி உரிமமும் ரத்து செய்யப்படும். தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினையை மெதுவாக தான் கையாளவேண்டும்.

ஏனெனில் இதில் தமிழக அரசியல்வாதிகளின் பங்கு உள்ளது. மீனவர் பிரச்சினை குறித்து இந்திய மற்றும் தமிழக அரசுடன், இலங்கை அரசு தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தும். இவ்வாறு மகிந்த அமரவீர பேசினார்.

tamil.oneindia.com

TAGS: