4–வது மாடியில் இருந்து நாயை தூக்கி வீசும் வீடியோ காட்சி கடந்த ஜுலை மாதம் பேஸ்புக்’கில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனையடுத்து நடைபெற்ற விசாரணையில் மாடியில் இருந்து நாயை தூக்கி வீசியவர் திருநெல்வேலியைச் சேர்ந்த கவுதம்சுதர்சன் (வயது 22) என்றும், அந்தக்காட்சியை செல்போனில் படம் பிடித்தவர் அவரது நண்பர் ஆசிஸ்பால் என்பதும் தெரியவந்தது.
இவர்கள் இருவரும் மருத்துவ மாணவர்கள் ஆவர். இந்நிலையில் இவர்களின் பெற்றோரே அவர்களை பொலிசில் ஒப்படைத்தனர். இதையடுத்து மாணவர்கள் இருவரும் ஸ்ரீபெரும்பதூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு பின்னர் அவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இதுபோன்ற குற்றச் செயலில் ஈடுபடுபவர்களுக்கு தண்டனையை அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது. சமூக வலைதளங்களிலும் கடும் விமர்சனங்கள் எழுந்தன.
இதனிடையே சென்னை உயர்நீதிமன்றம் கூறிய உத்தரவில், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழம், நாயை தூக்கி வீசிய இரண்டு மாணவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்றும், அபராதத் தொகையை பல்கலைக்கழகமே நிர்ணயித்துக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்ருந்தது.
இதனைத்தொடர்ந்து மருத்துவ மாணவர்கள் கவுதம்சுதர்சன், ஆசிஸ்பால் உள்ளிட்ட இருவருக்கும் தலா ரூ.2லட்சம் அபராதம் விதித்து சென்னை எம்.ஜி.ஆர்.மருத்துவப் பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகை அகில இந்திய விலங்குகள் நலவாரியத்திற்கு அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
விலங்குகள் துன்புறுத்தல் தொடர்பான வழக்குகளில் விதிகப்பட்ட அபராதங்களில் இதுவே அதிகபட்ச அபராதம் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com