ஷிவ்மோகா: கர்நாடகாவில் உள்ள துங்கபத்ரா ஆற்றில் விநாயகர் சிலைகளை கரைக்கும் போது நீரில் மூழ்கி 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். நீரில் அடித்துச் செல்லப்பட்டவர்களின் உடல்களை தேடும் பணியில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
கர்நாடக மாநிலம் ஷிவ்மோகா மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா கோலகலமாக கொண்டாடப்பட்டது. பல்வேறு விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
இதையடுத்து இன்று சிலை கரைப்பு நிகழ்ச்சி நடந்தது. இதற்காக 25க்கும் மேற்பட்டோர் துங்கபத்ரா ஆற்றில் படகில் விநாயகர் சிலையுடன் சென்றனர். அப்போது ஆற்றில் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால், சிலையை கரைக்கும்போது திடீரென படகு மூழ்கியது. இதில் படகில் இருந்த அனைவரும் ஆற்றில் மூழ்க தொடங்கினர்.
இதில் 15 பேர் நீந்தி கரை சேர்ந்தனர். 12 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதுகுறித்து போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலறிந்து வந்த போலீசார், தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. இதுவரை ஒரே ஒரு வாலிபரின் உடல் மட்டும் மீட்கப்பட்டது. மற்றவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. விநாயகர் சதுர்த்தி கோலாகலத்தில் 12 பேர் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதச் செயல்களைப் பொறுத்த வரையில் இந்துக்கள் இன்னும் விளையாட்டுப் பிள்ளைகளாகவே உள்ளனர்!
விளையாட்டு பிள்ளைகள் அல்ல -பகுத்தறிவுக்கு வேலை கொடுக்காத மட ஜென்மங்கள்.