இவ்வளவு படித்துள்ளீர்கள் பிறகு ஏன் கஷ்ட படுகிறீர்கள் – நெகிழ்ச்சி சம்பவம்

aaaமுன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் பேராசிரியர் ஒருவர் தற்போது உத்திர பிரதேச மாநிலத்தில் உள்ள பழங்குடி மக்களுக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்து வாழ்ந்து வருகின்றார்.

மத்திய பிரதேசத்திலுள்ள பேடுல் என்ற மாவட்டத்தில் சமீபத்தில் நடைபெற்ற தேர்தலின் போது அப்பகுதி மக்களை தவிர வேறு யாரும் இருக்க கூடாது என்று அனைவரையும் வெளியேற்றிக் கொண்டிருந்தனர்.

இதன்போது, குறிப்பிட்ட பேராசிரியரை விசாரணை நடத்திய அதிகாரிகளுக்கு தான் ஐ.ஐ.டி.யில் பேராசிரியராக பணியாற்றியதாகவும் தமது பெயர் ஆலோக் சாகர் எனவும் கூறியுள்ளார். ஆனால் இதை பொலிஸார் ஏற்க மறுத்து பணியாற்றியதற்கான ஆவணங்களை கேட்டுள்ளனர்.

இந்நிலையில், ஆவாணங்களை சோதனை செய்த பொலிஸார் திகைத்து போய் நின்றுள்ளனர். அதில் டெல்லி ஐ.ஐ.டியில் பொறியியல் துறையில் பணியாற்றியதற்கான சான்றிதழ்கள் இருந்துள்ளன.

இதைத் தொடர்ந்து, இவ்வளவு படித்துள்ளீர்கள் பிறகு ஏன் இவ்வாறு கஷ்ட படுகிறீர்கள் என பொலிஸார் வினவிய போது, ஆலொக் சாகர் தான் பணியிலிருந்து ராஜினாமா செய்து 26 வருடங்கள் ஆகிறது. இந்த 26 வருடங்களும் இந்த பேடுல் பகுதியில் உள்ள 750 பழங்குடி மக்களுக்காகவே உழைத்துக் கொண்டிருக்கிறேன். மின்சாரம், பள்ளிக் கூடம் உட்பட அடிப்படை வசதிகள் கூட இல்லாத இந்த ஊரில் இதுவரை 50,000 மரக்கண்றுகள் நட்டுள்ளேன். என சாதாரணமாக பதிலளித்துள்ளார்.

மேலும், ஆலொக் சாகர் பழங்குடி மக்கள் பேசும் மொழிகள் உட்பட பல மொழிகள் பேச தெரிந்தவர். இவர் பழங்குடி மக்களுக்காகவே தனது நேரம் முழுவதையும் செலவிடுகிறார் என தெரிவித்துள்ளனர்.

மதிப்பு மிகுந்த வாழ்க்கை, செல்வாக்கு, சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்து, மாணவர்கள் பலரும் உச்சம் தொட்டவர்கள் என இருந்து அத்தனை சுகங்களையும் விட்டெறிந்து பழங்குடியின மக்களுக்காக உழைக்க அவர் எடுத்திருக்கும் முடிவு தற்கால இளைய சமூகத்தினருக்கு ஒரு சிறந்த பாடம்.

-http://www.tamilwin.com

TAGS: