தாக்கியது பாக்கிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகள்- எவ்வாறு 17 இந்தியப் படை இறந்தது

india-armyஇந்தியாவின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் பகுதியில், “யூரி” என்ற கிராமம் பாக்கிஸ்தானுக்கு மிகவும் அருகில் உள்ளது. அதற்கு அருகே அமைந்துள்ள இந்த ராணுவத் தளம் மீது தான் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி 17 இந்திய வீரர்களைக் கொன்று குவித்துள்ளார்கள். இவர்களை தீவிரவாதிகள் என்று இந்திய அரசு சொல்வது ஒரு ஒரு நழுவல் போக்கை கடைப்பிடிக்க தான். உண்மையில் இவர்கள் பாக்கிஸ்தான் ஆதரவுபெற்ற. மற்றும் பாக்கிஸ்தான் ராணுவத்தால் நன்கு பயிற்றுவிக்கப்பட்ட ஒரு ஆயுதக் குழுவாகும். சுருக்கமாகச் சொல்லப்போனால் “ஆள ஊடுருவும் படையணி” (Deep Penetration group) இதில் வேதனை தரும் விடையம் என்னவென்றால், இதுவரை 4 பேரை தான் இந்திய ராணுவம் சுட்டுக் கொன்றுள்ளது. பல தாக்குதல்காரர்கள் தப்பிச் சென்றுவிட்டது தான் பெரும் அதிர்சி தரும் விடையம்.

இது இவ்வாறு இருக்க எவ்வாறு இவ்வளவு நிறைய இந்திய ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டார்கள் என்று விளக்கம் கேட்டு, இந்திய பாதுகாப்பு அமைச்சர் அவரச கூட்டம் ஒன்றை கூட்டியுள்ளார். இதில் காஷ்மீருக்கு பொறுப்பான ராணுவத் தளபதி உட்பட பலர் கலந்துகொண்டுள்ளார்கள் என்று அதிர்வு இணையம் மேலும் அறிகிறது. தாக்குதல் நடத்தியவர்கள் உள்ளூர்வாசிகள் அல்ல. அவர்கள் பாக்கிஸ்தானில் இருந்து மறைவாக யாருக்கும் தெரியாமல் இந்திய எல்லைக்குள் வந்து தங்கி. பின்னர் இந்திய ராணுவ முகாமை நோட்டமிட்டு. தாக்குதல் திட்டம் தீட்டி. இந்திய ராணுவம் சற்றும் எதிர்பாராத நேரத்தில் தாக்கி பெரும் அழிவை ஏற்படுத்தி. பின்னர் தப்பியும் சென்றுள்ளார்கள் என்றால். இது குறித்து இந்திய பாதுகாப்பு அமைச்சு பெரும் கவனம் செலுத்துவது நல்லது.

ஏன் எனில் இது போன்ற ஆள ஊடுருவும் படையணிகள், ஒரு நாட்டுக்குள் வர முடியுமேயானால். அது அன் நாட்டின் பாதுகாப்பிற்கு பெரும் பங்கம் விளைவிக்கும். தாக்குதல் நடத்திவிட்டு, எவ்வாறு தப்புவது. அதன் பின்னர் மாட்டிக்கொள்ளாமல் மறைவிடத்தில் இருந்து பின்னர் பாதுகாப்பான இடம் ஒன்றுக்குச் செல்லுதல் என்பன, இங்கே நன்றாக திட்டம் தீட்டப்பட்டு உள்ளது. இந்திய ராணுவம் குறித்த யூரி என்னும் கிராமத்தையே லாக் டவுன் செய்து தேடுதல் நடத்தி வருகிறார்கள். ஆனால் இந்த பாக்கிஸ்தானியர்கள் சிக்குவார்களா என்பது தான் பெரும் சந்தேகமாக உள்ளது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

-http://www.athirvu.com

TAGS: