காஷ்மீர் தாக்குதல்: பாகிஸ்தான் விமான போக்குவரத்துகள் மூடல்

indian_army_kashmirஇந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே பதற்றமான சூழல் அதிகரித்து வருவதால், பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் உள்ள வான் பாதைகளைவிமான போக்குவரத்துத் துறை அதிகாரிகள் மூடியுள்ளனர்.

பல உள்நாட்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்திய நிர்வாகத்துக்குட்பட்ட காஷ்மீரில் நடைமுறையில் உள்ள எல்லை பகுதியில், இந்திய ராணுவ தளத்தில் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 18 பேர் கொல்லப்பட்டதற்கு பதிலடி கொடுக்க இந்தியா தயாராகி வருகிறது என பாகிஸ்தான் ஊடகங்களில் ஊகங்கள் எழுந்துள்ளன.

இந்த தாக்குதல் குறித்து இந்தியா பாகிஸ்தானை குற்றம் சாட்டியுள்ளது; ஆனால் இந்திய நிர்வாக காஷ்மீரில் இளம் இஸ்லாமியவாத ஆர்வலர் ஒருவர் கொல்லப்பட்டதையடுத்து தூண்டப்பட்டு, பல வாரங்களாக நடந்த வன்முறைகளை திசை திருப்பவே இந்தியா முயற்சிக்கிறது என்று பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.

ஐ.நா., பொது சபையில் இன்று உரையாற்ற உள்ள பாகிஸ்தான் பிரதமர் நவாப் ஷெரிப், இது குறித்தும் பேசுவார் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. -BBC

TAGS: