காவிரிக்காக போராட்டம்.. கன்னட அமைப்பினர் அடுத்தடுத்து கைது.. கலவரத்தை தவிர்த்த பெங்களூர் போலீசார்

cauvery-protest3பெங்களூர்: காவிரி மேலாண்மை வாரியத்தை 4 வாரங்களில் அமைக்க வேண்டும், தமிழகத்துக்கு 7 நாட்கள் வினாடிக்கு 6 ஆயிரம் கன அடி நீர் திறக்க வேண்டும் என்பது போன்ற உச்சநீதிமன்ற உத்தரவுகளை எதிர்த்து, பெங்களூரில் போராட்டம் நடந்த முயன்ற கன்னட அமைப்பினர் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டதால் அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டன.

காவிரிக்காக, பெங்களூரில் கடந்த 12ம் தேதி பெரும் கலவரம் வெடித்த நிலையில், மீண்டும் கலவரங்கள் வெடிக்காமல் இருக்க வரும், 25ம் தேதிவரை நகரம் முழுக்க 144 தடையுத்தரவு அமல்படுத்தியுள்ளது காவல்துறை.

எனவே போராட்டங்களுக்கு அனுமதி கிடையாது. இருப்பினும், காந்திநகர் பகுதியில், கர்நாடக ரக்ஷனவேதிகே அலுவலகத்தில் இருந்து விதானசவுதாவை முற்றுகையிட கிளம்பிய கர்நாடக ரக்ஷனா வேதிகே தலைவர் நாராயணகவுடா, நூற்றுக் கணக்கான தொண்டர்கள் அந்த இடத்திலேயே கைது செய்யப்பட்டு போலீஸ் பஸ்களில் ஏற்றி அனுப்பப்பட்டனர். பேட்டி கொடுக்கவும் அவர்களை போலீசார் அனுமதிக்காமல் விரட்டிவிட்டனர். விதானசவுதா எதிரே போராட்டம் நடத்த வந்த வாட்டாள் நாகராஜும் உடனடியாக கைது செய்யப்பட்டார். பெங்களூரில் மேற்கொண்டு போராட்டம் பரவாமல் துரிதமாக செயல்பட்டு முடக்கியது காவல்துறை .

tamil.oneindia.com

TAGS: