பிரேசிலின் ரியோ டி ஜெனீரோ மாநகரில் நடைபெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டியில் இந்தியா சார்பில் 19 வீரர்கள் பங்கேற்றனர்.
இதில் இந்தியா 2 தங்கம், 1 வெள்ளி, 1 வெண்கலம் என மொத்தம் 4 பதக்கங்கள் வென்றுள்ளது.
இப்போட்டியில் முதன் முதலில் தங்கம் பெற்றுத்தந்த மாரியப்பன் தங்கவேலு இன்று இந்தியா திரும்பினார்.
இவருக்கு டெல்லி விமான நிலையத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் விஜய் கேயல் தலைமையில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர் கூறுகையில், பாரா ஒலிம்பிக்கில் தங்கம் வென்றது மகிழ்ச்சி அளிப்பதாகவும், அடுத்து 2020 ஆண்டு டோக்கியாவில் நடக்கும் ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தனது இலக்கு எனவும் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் விளையாட்டு அமைப்பை ஏற்படுத்தி இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.
இவருடன் பதக்கம் வென்ற மற்ற வீரர்களும் இந்தியா திரும்பினர். பதக்கம் வென்ற வீரர்கள் அனைவரும் இன்று மாலை பிரதமர் மோடியை சந்திக்கவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com