உரி தாக்குதல்: பழிக்கு பழி தீர்த்த இந்திய ராணுவம்

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் இந்திய ராணுவ தலைமையகம் அமைந்துள்ளது.

இதன் மீது கடந்த 18 ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 பேர் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதலை நடத்தியது யார் என்பது குறித்து, புது புது தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கும் நிலையில், தற்போது லஷ்கர்-இ-தொய்பா அமைப்பை சேர்ந்த தீவிரவாதிகள் தாக்குதலை நடத்தியது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து ராணுவ உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் ரன்பிர் சிங் கூறுகையில், ‘ஆரம்பக் கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் ஜெய்‌ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்தவர்கள் என கூறப்பட்டிருந்தது.

ஆனால் இப்போது தான் உண்மை தெரிய வந்துள்ளது. லஷ்கர் தீவிரவாதிகள் இவர்கள் ராணுவ தலைமையகத்தின் கம்பி வேலிகளை இரண்டு இடங்களில் துண்டித்து 150 மீட்டர் தூரம் இந்திய எல்லைக்குள் ஊடுருவி தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, தாக்குதல் குறித்த ஆதாரம் பாகிஸ்தான் தூதரிடம் வெளியுறவுத்துறை செயலாளர் ஜெய்சங்கர் வழங்கியுள்ளார்.

மேலும், இந்தியாவுக்கு எதிரான தீவிரவாத தாக்குதல் சதி திட்டம் பாகிஸ்தானில் நடைபெற அனுமதிக்க மாட்டோம் என அந்நாடு உறுதி அளித்திருந்ததையும் ஜெய்சங்கர் சுட்டிக் காட்டியுள்ளார்.

உரி தாக்குதலில் பழி தீர்த்த இந்திய ராணுவம்

உரி தாக்குதலில் பழி தீர்க்கும் விதமாக ராணுவ வீரர்கள் எல்லை தாண்டி சென்று, 20 தீவிரவாதிகளை கொன்று குவித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும், இந்த தாக்குதலில் 200 தீவிரவாதிகள் படுகாயமடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து 36 தலைகளை கொண்டு வர வேண்டும்: ராணுவ வீரரின் மனைவி கதறல்

உரி தாக்குதலில் உயிரிழந்த 18 வீரர்களின் ஆத்மா சாந்தியடையும் வகையில் பாகிஸ்தானில் இருந்து 36 தலைகளை பலி கொடுக்க வேண்டும் என தாக்குதலில் வீர மரணமடைந்த ராணுவ வீரரின் மனைவி தெரிவித்துள்ளார்.

ஜம்மு- காஷ்மீர் மாநிலம் உரி பகுதியில் இந்திய ராணுவத்தின் தலைமையகம் அமைந்துள்ளது.

இதன் மீது கடந்த 18 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 18 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.

இந்த தாக்குதலை பாகிஸ்தான் நடத்தியதற்கான ஆதாரம் கிடைத்துள்ளது என ராணுவ அமைச்சகம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் தான் தாக்குதல் நடத்தியுள்ளது என உறுதிபட தெரியவந்த நிலையில், அந்நாட்டிற்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் குவிந்து வருகின்றன.

தாக்குதலில் வீர மரணம் அடைந்தவர்களின் உடல்கள் ராணுவ மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டு வரும் நிலையில், இதற்கு முன்னரும் உரி பகுதியில் நடந்தது போல் எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளுடன் போராடி உயிர்நீத்த இந்திய ராணுவ வீரர்களின் மனைவியர், ’பாகிஸ்தானுக்கு இந்தியா தக்க பாடம் கற்பிக்க வேண்டும்’ என வலியுறுத்தி வருகின்றனர்.

மேலும், மற்றொரு உயிரிழந்த வீரரின் மனைவி தர்மாவதி என்பவர், கடந்த 2013-ம் ஆண்டு எல்லைப்பகுதியில் பாகிஸ்தான் தீவிரவாதிகளால் எனது கணவர் ஹேம்ராஜ் சிங் கொடூரமான முறையில் தலை துண்டித்து கொல்லப்பட்டார்.

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தால் என் கணவரின் தலைக்கு பதிலாக பாகிஸ்தானில் இருந்து பத்து தலைகளை கொண்டு வருவோம் என்று அப்போது சுஷ்மா சுவராஜ் கூறியிருந்தார்.

உரி தீவிரவாத தாக்குதலில் 18 இந்திய வீரர்கள் பலியாகியுள்ள நிலையில், பாகிஸ்தானில் இருந்து குறைந்தபட்சம் 36 தலைகளையாவது இந்தியா கொண்டு வர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: