நான் தமிழகத்தின் முதல்வராக பதவியேற்பதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
தமிழகத்தில் உள்ள கட்சியின் பெயரை மாற்றி வைத்துக்கொண்டு, தாங்கள் தமிழக தலைவர் என பறைசாற்றிக் கொள்கிறார்கள்.
திராவிட கட்சி என வைத்துக் கொண்டு, கேட்டால் நாங்கள் தமிழ் மக்களுக்கான தலைவர்கள் என கூறிக்கொள்கிறார்கள்.
தமிழக மக்களுக்கு திராவிடம் என்றால் என்னவென்றே தெரியாது.
தென்னிந்தியன், இந்தியன், திராவிடன் என பெயர் வைத்துக்கொண்டு இருக்கும் இவர்கள் ஒருபோதும் தமிழனாக வாழ்ந்தது இல்லை.
கச்சதீவை கொடுத்தது கொடுத்தது தான் என்று காங்கிரஸ் சொல்கிறது. கச்சதீவு எப்போதும் இந்தியருக்கு சொந்தமாக இருந்தது இல்லை என்று சொல்கிறது பா.ஜ.க.
ஆனால் கச்சதீவை திருப்பி எடுத்தேயாக வேண்டும் என போராடுகிறது தமிழ் தேசியம். இதனை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்தது இந்திய தேசியம், தடையை உடை என்கிறது தமிழ் தேசியம், இதன் மூலம் மக்கள் தமிழ் தேசியத்தை புரிந்துகொள்ள வேண்டும்.
நான் முதல்வர் பதவியில் ல் என்றாவது ஒரு நான் அமருவேன், இதற்கு நான் ஒன்றும் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றார்.
-http://www.tamilwin.com
மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறோம் அய்யா.அப்போதாவது தமிழன் தமிழ் மண்ணுக்கு ஒரு தலைவன் கிடைத்தான் என்று பெருமைகொள்வோம்
ஹீ… ஹீ… ஹீ… முடவன் கொம்புத் தேனுக்கு ஆசை பட்ட கதைதான்
முதல்வரா முதல்வனா எது சரின்னு தெரியாம குழம்பிபோய் திராவிடனிடம் விளக்கம் கேட்டு தமிழன் மானத்தை வாங்கவா
சாராயத்திட்கும் ..பிரியாணிக்கும் ..பணத்திட்கும் ஒட்டு (செம்மொழி ) போடும் தகர தமிழா நாட்டில் இது வெறும் கனவு தான்…
ஐயா சீமான் அவர்களே தயவுசெய்து அனாவசியமாக பெருமை பேச வேண்டாம் –உறுதியாக தீர்க்கமாக அதற்கான முயற்சிகளை தீவிரமாக செயல் படுத்துங்கள்– துரோகிகள் கூட்டம் பல அங்கு. வீண் பேச்சு தேவை இல்லை. வாழ்த்துக்கள்.
உண்மையிலே உலகத்தில் உள்ள ஒவ்வொரு தமிழனும் எதிர்பார்ப்பாது தமிழ்நாட்டிற்க்கு ஒரு தமிழன் தான் முதலமைச்சர் வரவேண்டும் என்பது. என்ன சாபக்கேடு என்று தெரியவில்லை முடியவில்லை. நாம் மற்ற இனத்தவரை வேண்டாம் என்று சொல்லவில்லை. திரு சீமானும், அப்படி நினைக்க மாட்டார் என்று நினைக்கிறன். இந்தியாவில் இருக்கின்ற மற்ற மாநிலங்களில் எந்த மாநிலத்தில் ஒரு தமிழன் முதலமைச்சர்ராக இருகின்றான். அதுதான் திரு. சீமான் கேட்கின்றார் அது ஒன்றும் தவறு இல்லையே. நாமும் அப்படியே நினைப்போம். தமிழகத்தில் நிறைய கல்விமான்கள் தெலுங்கர்கள் இருகிறார்கள். நாம் கேட்பது ஒரு மற தமிழன். தவறு இல்லையே. ஏன் தமிழனக்கு அறிவு இல்லையா. இந்தியாவில் அணுகுண்டை கண்டுபிடிக்க உதவியவன் ஒரு தமிழன் தானே. உலக அளவில் ஒஸ்கார் விருது வாங்கியவன் ஒரு தமிழன் தனே இன்னும் எத்தனையோ தமிழன் சாதித்து உள்ளான். ஏன் உலக அரசியலில் தமிழன் இன்று நல்ல பதவிகளில் உள்ளான் குறிப்பாக சிங்கப்பூர் அடுத்த பிரதமர் ஒரு தமிழன் என்று அந்த நாடு சொல்கிறது. இப்படி இருக்க தமிழ் நாட்டிற்கு என்ன சாபக்கேடு. அதை தான் திரு. சீமான் கேட்கிறார் என்ன தவறு. திரு. சீமான் அவர்களும் தான் தன் முதலைமைச்சராக வர வேண்டும் என்று சொல்ல வில்லையே. அவர் போராடுகிறார் எதற்கு என்று நாம் அதை யோசிக்க வேண்டும். நாம். தான் ஜாதி வெறி பிடித்து அடுகிறோமே பிறகு எப்படி யோசிப்போம். நம்மிடம் இருக்கும் ஜாதிகள் பாப்பான, பறையன், பல்லன், பறையன், சக்கிலியன், கவுண்டன், அதிலும் உயர்ந்த கவுண்டன்கள் என்று அதிக அளவில் ஜாதிகள். இதை முதலில் ஒழிக்க வேண்டும். அன்று திரு. பிரபாகரன் இந்த ஜாதியை வைத்து போராட வில்லை. ஒட்றுமையாக மக்களுக்காக போராடினர் கடைசியில் அவருக்கு கிடைத்தது மரணம்தான். இன்று திரு. சீமான் அந்த போர் வாலை கையில் எடுது உள்ளார். நாம் ஒற்றுமையுடன் குரல்கள் கொடுப்போம். செய்விர்களா தமிழர்களே. செய்வோம் ஒற்றுமையாக இருந்து நண்பர்களே.
“தமிழகத்தில் நிறைய கல்விமான்கள் தெலுங்கர்கள் இருக்கிறார்கள்” உண்மையே! கலைஞர் கருணாநிதியே ஒரு தமிழறிஞர் தான். ஆனால் ஒரு தமிழறிஞ்ர் ஆட்சியில் தான் தமிழர்களுக்கு நிறைய துரோகங்கள் இழைக்கப்பட்டிருக்கின்றன. தமிழனை ஒரு குடிகார இனமாக மாற்றியமைத்தது, தமிழ் நாட்டின் வளங்களை மற்ற மாநிலங்களுக்கு கடத்தியது, தமிழனின் சரித்திரங்களை முற்றாக ஒழித்துக்கட்டியது அனைத்தும் கலைஞரின் கைவண்ணங்கள்! அவர் நல்லதொரு ஆட்சியை கொடுத்திருந்தால் தமிழன் ஏன் தெலுங்கனை வெறுக்கிறான்? ஒரு மனிதனின் தவறால் அந்த சமூகத்தையே வெறுக்க வேண்டிய ஒரு சூழல் நாம் ஏற்படுத்தவில்லையே. எது எப்படியோ, கருணாநிதி தமிழர் வெறுக்கப்பட வேண்டிய ஒரு துரோகியே!
“நல்லதொரு ஆட்சியை கொடுத்திருந்தால்”!
தமிழன் தலை நிமிர்ந்து வாழ வேண்டும் என்று நினைத்திருந்தால் நல்லதொரு ஆட்சியை கொடுத்திருப்பார். அவர் நினைக்கவில்லை, கொடுக்கவில்லை.