ஏன் இந்த துல்லிய தாக்குதல்: இந்தியா- பாகிஸ்தான் என்ன சொல்கிறது?

indiapakistanஜம்முகாஷ்மீர் விவகாரம் தொடர்பாக இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் பல ஆண்டுகளாக போராட்டங்கள், வன்முறைகள் நடைபெற்று வருகிறது.

தற்போது அதன் விளைவாக பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த 18 ஆம் திகதி ஜம்முகாஷ்மீரின் உரி பகுதியில் உள்ள இந்திய இராணுவத்தின் மீது தாக்குதல்கள் நடத்தினர். இதில் 18 இராணுவவீரர்களும், 4 தீவிரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

தீவிரவாதிகளின் இக்கொடூர செயலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்திய இராணுவம் இன்று பாகிஸ்தான் பகுதியில் தீவிரவாதிகள் தங்கியிருந்த பகுதியின் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்திய சார்பில் ஏராளமான பாகிஸ்தான் தீவிரவாதிகள் இறந்துள்ளனர் என கூறப்படுகிறது. ஆனால் பாகிஸ்தானோ இரண்டு படைவீரர்கள் இறந்துள்ளனர் என கூறியுள்ளது.

தற்போது நடைபெற்ற தாக்குதல் குறித்து இந்தியா சார்பில் கூறுகையில், இந்தியாவின் எல்லைப்பகுதியான கட்டுபாட்டு கோட்டுக்கு அருகே பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஊடுருவும் நோக்கில் கூடியிருந்தனர். இதன் காரணமாக தாக்குதல் நடத்துவது குறித்து மத்திய அரசிடம் விவாதித்தோம்.

மத்திய அரசும் இதற்கான அனுமதி தந்தது. இதனால் தாக்குதலுக்கு தயாராகினோம். சம்பவ தினத்தன்று காலை தாக்குதலை நடத்தினோம். இது முற்றிலுமாக பயங்கிரவாதிகளை வைத்து மட்டுமே நடத்தப்பட்டது.

அது மட்டுமில்லாமல் பாகிஸ்தான் நிர்வாக கட்டுபாட்டில் உள்ள காஷ்மீரை வசிப்பிடமாக கொண்ட சில பாகிஸ்தானியர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை குறித்து பாகிஸ்தான் இராணுவத்திடம் இந்தியா அதிகாரபூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும் பாகிஸ்தான் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பான புகைப்படங்கள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அது உரிய நேரத்தில் வெளியிடப்படும் எனவும் இந்தியா இராணுவம் சார்பில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்தியாவின் இக்கருத்துக்கு பாகிஸ்தான் அப்படியே எதிர்மறையாக கூறியுள்ளது. அதில், தாக்குதல் நடத்திய இந்தியாவுக்கு பதிலடி தாக்குதல் கொடுத்துள்ளோம்.

இந்தியா நடத்திய தாக்குதலில் எந்த ஒரு துல்லியமான தாக்குதல் நடைபெறவில்லை. குழப்பத்தை ஏற்படுத்தி அதை மிகைபடுத்துவதற்காகவே இந்தியா இப்படி கூறுகிறது .

மேலும் அதிகாலை இரண்டுமணிக்கு நடந்த இந்த துப்பாக்கிச் சூடு சுமார் ஆறு மணி நேரம் நீடித்ததாகவும், இதில் இரண்டு பாகிஸ்தான் படையினர் இறந்துள்ளார்களே தவிர வேற எந்த ஒரு பெரிய தாக்கமும் ஏற்படவில்லை என பாகிஸ்தான் தரப்பில் கூறப்படுகிறது.

தாங்கள் அமைதியாக இருப்பதை கண்டு தாங்கள் பயந்துள்ளதாக நினைக்கவேண்டாம் என்றும் எந்த ஒரு தாக்குதலுக்கும் நாங்கள் தயராக இருப்பதாகவும் பாகிஸ்தான் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

-http://news.lankasri.com

TAGS: