போரால் யாருக்குமே பலன் இருக்காது.. இரண்டு பக்கமும் பெரும் இழப்பு மட்டுமே மிஞ்சும்..!

atomபோர்மேகம் சூழ்ந்துள்ளதாக ஊடகங்களில் தகவல்கள் பரபரக்கிறது. அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என்றாலும், ஒரு வேளை அப்படி போர் மூண்டால், அதன் விளைவுகள் எப்படி இருக்கும்…. இதோ பதறவைக்கும் பகீர் ரிப்போர்ட்.. இந்தியாவோ, பாகிஸ்தானோ… சுமார் 100 அணுகுண்டுகளை வீசினால். ஒரு விநாடியில் 2 கோடி பேர் உயிரிழப்பார்கள். அந்த அளவுக்கு சக்தி மிக்க அணுகுண்டுகள் 2 நாடுகளிலும் உள்ளது. மேலும், இந்த நாடுகள் தவிர உலகம் முழுவதும் சுனார் 20 கோடி பேர் பாதிப்பு அடைவார்கள்.

பாகிஸ்தானில் ஏவுகணைகளே அதிகம். தன்னிடம் உள்ள 86 ஏவுகணைகளில் அணு ஆயுதங்களை பாகிஸ்தான் பொறுத்தி வைத்துள்ளதாக தகவல். குறிப்பாக ஹதீப் என்ற ஏவுகணை மிகவும் அபாயகரமானது. இந்த ஏவுகணை தாக்குதல் மூலம் இந்தியாவிலுள்ள டெல்லி, மும்பை, கொல்கத்த, சென்னை, பெங்களூர் ஆகிய நகரங்களை முற்றிலும் அழிக்க முடியும்.

இந்தியாவின் பலம் இந்தியா பிருத்வி, அக்னி ரக ஏவுகணைகளை நம்பியுள்ளது. இதில் இந்தியாவின் 53 சதவீத அணு ஆயுதங்களைப் பொருத்தி தாக்க முடியும். நம்மிடம் உள்ள ஏவுகணைகள் மூலம் பாகிஸ்தானை முழுமைாக கவர் செய்ய முடியும். அதேபோல இந்தியாவின் விமானப்படை மூலமாக 45 சதவீத அணு ஆயுதங்களைப் பயன் படுத்த முடியும்.

ஆனால் இந்தப் போரால் யாருக்குமே பலன் இருக்காது.. இரண்டு பக்கமும் பெரும் இழப்பு மட்டுமே மிஞ்சும் என்கிறார்கள் நிபுணர்கள்.

-http://www.athirvu.com

TAGS: