மீனவர்கள் எல்லை தாண்டுவதால் தான் கைது: ரணில் விக்ரமசிங்கே

ranilmodiபுதுடில்லி: மீனவர்கள் எல்லை தாண்டுவதால்தான் கைது செய்யப்படுவதாக இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார்.
பிரதமருடன்சந்திப்பு: டில்லி வந்துள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இன்று இலங்கை பிரதமர், காங்கிரஸ் தலைவர் சோனியா, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து பேசினார். டில்லியில் பிரதமர் மோடியை சந்தித்தார். ஐதராபாத் இல்லத்தில் நடந்த இந்த சந்திப்பின் போது இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ரணில் விக்ரமசிங்கே எடுத்துரைத்தார். மேலும் இரு நாட்டு உறவு, மீனவர் பிரச்னை குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜை சந்தித்த ரணில், இரு நாட்டு உறவு மற்றும் வர்த்தகம் குறித்து ஆலோசனை நடத்தினார். இந்த சந்திப்பின் போது பல மூத்த அதிகாரிகள் இருந்தனர்.

மீனவர்கள் பேச்சுவார்த்தை:

பின்னர் டில்லியில் ரணில் விக்ரமசிங்கே பத்திரிகையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது: பேச்சுவார்த்தை மூலமே மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண முடியும். எல்லை தாண்டுவதால் இரு தரப்பிலும் விரும்பத்தகாத பிரச்னைகள் ஏற்படுகின்றன. மீனவர்கள் எல்லை தாண்டுவதால் அவர்களை கைது செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. பிரச்னைக்கு தீர்வு காண இரு நாட்டு மீனவர்கள் பேச்சுவார்த்தை நவம்பரில் நடக்கும். இலங்கை இந்திய வெளியுறவு அமைச்சர்கள் பேச்சுவார்த்தையை ஒருங்கிணைப்பார்கள்.

சார்க் சந்தேகம்:

ஆப்கன், வங்கதேசம் உள்நாட்டு பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகளை எதிர்கொண்டுள்ளன. ஒத்துழைப்பு இல்லையென்றால் எதிர்காலத்தில் சார்க் இருப்பது சந்தேகம். எல்லை தாண்டிய பயங்கரவாதம் குறித்து சார்க் ஆலோசனை நடத்த வேண்டும். பயங்கரவாதத்தை எதிர்த்தது போராடுவது குறித்து ஆலோசனை நடத்த வேண்டும்.

சீன உறவு எப்படி?

இந்தியா இலங்கை உறவு வலுவாக உள்ளது. பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களில் இந்தியாவுடன் இணைந்து செயல்படுகிறோம்.இலங்கை உள்கட்டமைப்பை மேம்படுத்த இந்தியா தொடர்ந்து உதவி செய்கிறது. சீனாவுடனான இலங்கை உளவு பொருளாதார ரீதியிலானது. ராணுவ ரீதியிலானது அல்ல.

பொறுமை காத்த மோடி:

வடக்கு மாகாணத்தில் மக்கள் சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றனர்.இலங்கையில் தமிழர்களுக்கு உரிய நிலங்கள் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றன.போரினால் பாதிக்கப்பட்ட பள்ளி, மருத்துவமனைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. பாக்.,குடன் அமைதிக்கான நடவடிக்கையை பிரதமர் மோடி எடுத்துள்ளார். இந்திய பிரதமர் கட்டுப்பாடுடன் கூடிய பொறுமையை கடைபிடித்துள்ளார். இலங்கையும் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடு எனக்கூறினார்.

-http://www.dinamalar.com

TAGS: