சீனா தயாரிப்புகளை புறக்கணிக்கும் இந்தியர்கள்.. விநோத போராட்டம்..!

make in indiaடெல்லி: இணையதளம், சமுக வலைத் தளங்கள் எனப் பலவற்றில் நடைபெற்ற பிரச்சாரத்தை அடுத்து ஐக்கிய நாடுகள் சபையில் பாகிஸ்தானிற்கு ஆதரவளித்த சீனாவின் பொருட்கள் வாங்குவதைப் புறக்கணிக்க வேண்டும் என்று செய்திகள் பரவத் துவங்கியது.

இதனைத் தொடர்ந்து சீனாவின் பொருட்கள் குறைந்த விலையில் விற்று வந்த போதிலும் 10 முதல் 20 சதவீதம் வறை விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

வர்த்தகத்தைப் பாதிக்கும் சீனாவிற்குப் பாடம் புகட்ட வேண்டும் என்று மக்கள் இது போன்று புறக்கணித்து வந்தால் இந்தியா சீன பொருட்களுக்கு உலகளவில் ஒரு மிகப் பெரிய சந்தை என்பதால் இது வர்த்தகத்தைப் பெரிதும் பாதிக்கும் என்று அனைத்து இந்திய வர்த்தகர்கள் சங்க தலைவர் பிரவின் கந்தல்வால் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் மட்டும் 1000 கோடி

நமது மதிப்பீட்டின் படி சென்ற 12 வாரங்களில் படிப்படியாக குறைந்த வந்த சீன பொருட்கள் விற்பனையால் இந்த விழாக் காலத்தில் டெல்லியில் மட்டும் 1000 கோடி வரை இழப்பு ஏற்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்தியாவில் உள்ள பிற மாநிலங்களிலும் இதே நிலை தான் ஏற்பட்டு உள்ளது.

இந்திய தயாரிப்பு வேண்டும்

சாதார் பஜாரில் உள்ள தேவேந்திர பன்சால் என்ற வர்த்தகர் இது பற்றி கூறுகையில் தேசிய தலைநகர பகுதியில் இருந்து வரும் பல வியாபாரிகள் முன்பெல்லாம் விலை குறைவான சீன பொருட்களையே வாங்கிச் சென்றனர். ஆனால் இந்த முறையோ அதை குறைத்துக் கொண்டு இந்திய தயாரிப்புகளையே பெற்றுச் சென்றனர் என்று தெரிவித்தார்.

மோடி பெயரில் மோசடி கடிதம்

மோடி பெயரில் மோசடியான ஒரு கடிதம் தயாரிக்கப்பட்டு அதில் சீன பொருட்களைப் பயன்படுத்தாமல் இந்திய தயாரிப்புகளை பயன்படுத்துங்கள் என்று சமுக வலைத்தளங்களில் ஒரு கடித பிரச்சாரம் வலம் வந்தது. இந்த மோசடி கடிதம் ஃபேஸ்புக், டிவிட்டர் என எல்லாச் சமுக வலைத்தளங்களிலும் வலம் வந்தது. இதைக் கண்டறிந்த பிரதமர் அலுவலகம் இது குறித்து அறிக்கை ஒன்றையும் வெளியிட்டது.

எப்படி இந்த புறக்கணிப்பு இந்தியாவிற்கு உதவும்?

பெரும்பாலான வர்த்தகர்கள் இந்த புறக்கணிப்பால் இப்போது வியாபாரம் பாதிக்கப்பட்டாலும் நீண்ட கால இந்திய வளர்ச்சிக்கு இது கண்டிப்பாக உதவும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர். நடிகர் விவேக் சீனப் பொருட்களை முற்றிலும் தவிர்ப்போம்… இந்தியப் பொருட்களையே வாங்குவோம் என நடிகர் விவேக் வியாழக்கிழமை வேண்டுகோள் விடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

tamil.goodreturns.in

TAGS: