இந்தியாவில் உள்ள நடன பெண் சிலை மீது பாகிஸ்தான் வழக்கு

nadanappennஇந்தியா – பாகிஸ்தான் இடையே பிரச்னைகள் அதிகரித்து வரும் நிலையில் முன்பு மொகஞ்சதாரோ பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட நடன பாவனையில் இருக்கும் ஒரு பெண் வெங்கலச்சிலையை, இந்தியாவில் இருந்து மீட்க லாகூர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் வழக்கு தொடர்ந்துள்ளது.

சிந்து சமவெளி நாகரிக காலத்தின் வரலாற்று ஆதாரமாக 1926 ம் ஆண்டு பாகிஸ்தானில் உள்ள மொகஞ்சதாரோ பகுதியில், சுமார் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான ஒரு வெண்கலச்சிலை கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த நடனப் பெண் சிலை, இந்தியாவில் டெல்லியில் உள்ள தொல்லியல் துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பழங்கால கலைப்பொக்கிஷமான இந்த சிலையை, இந்தியாவிடம் இருந்து மீட்டு, தங்கள் நாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று லாகூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

வழக்கு மனுவில் கூறியிருக்கும் சாரம் இதுதான்.

ஐரோப்பா கண்டத்தில் இருக்கும் லியானார்டோ டாவின்சியின் பிரபல ‘மோனலிசா’ ஓவியத்துக்கு இணையான வரலாற்று முக்கியத்துவம் கொண்டது இந்த சிலை. இது பாகிஸ்தானுக்கு உரிமையான கலாச்சார அடையாளம் ஆகும்.

ஆகவே, அதை இந்தியாவிடமிருந்து மீட்டு பாகிஸ்தான் பாதுகாக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: