முதல்வர் ஜெயலலிதா உடல்நிலை பற்றி சமூகவலைதளங்களில் தவறான வதந்தி பரப்பியதாக தனியார் வங்கி ஊழியர் உள்பட இருவர் கைது செய்யபட்டுள்ளனர்.
உடல்நலக்குறைவு காரணமாக கடந்த 22ஆம் திகதி முதல் தமிழக முதல்வர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்.
முதல்வர் உடல்நிலை குறித்து சமூகவலைதளங்களில் அவ்வப்போது வதந்திகள் பரவி வருகிறது.
வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கபடும் என பொலிசார் எச்சரிக்கை விடுத்ததையும் மீறி வதந்திகள் பரவிய வண்ணம் உள்ளது.
இந்நிலையில் முதல்வர் பற்றி தவறான வதந்தி பரப்பியதாக கடந்த 10ம் திகதி தமிழ்நாட்டிலுள்ள நாமக்கல்லை சேர்ந்த சதீஷ் மற்றும் மதுரையை சேர்ந்த மாடசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இந்நிலையில் தூத்துகுடியை சேர்ந்த வங்கி ஊழியர் திருமணி செல்வமும், சென்னையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் பாலசுந்தரம் ஆகிய இருவரும் இன்று பொலிசாரால் கைது செய்யப்பட்டனர்.
மேலும் 42 பேர் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com
ஜெயலலிதாவுக்கு இவ்வளவு அதிகாரமா? எப்படி இவ்வளவு நாடகம் அரேங்கேறுகிறது? அங்கு இவ்வளவு ஈன மடையர்களா? அவளை இவ்வளவு தூக்கி கொண்டாடுவது ஏன்? உண்மையில் அது உலகின் எட்டாவது அதிசயம் தான். அவளை இன்னும் அம்மா என்று பல கட்சி தலைகள் கூறுகின்றன– உண்மையில் அவள் திறமைசாலிதான்–இவ்வளவு மடையர்களை தன்னுடை காலுக்கு அடியில் வைத்திருக்க முடியுதே? நினைக்கவே கூசுகிறது–என்னே மடையர்கள்?
சரியான நடவடிக்கை ..இவர்களின் தாய் ..தங்கைகள் அக்காமார் ..சுகவீனம் அற்று இருந்தால் இப்படி செய்வார்களா ? குடடையை குழப்பி ..ஆட்சியை பிடித்து …நோஞ்சானை முதல்வர் ஆக்கும் நடமாடும் பிணத்தின் நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று …பாவம் எல்லாமே தோல்வி தான் பரிதாபம்