சினிமா பாணியில் உளவு? இதுவரை 153 புறாக்கள் பறிமுதல்!

pigionஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்குள் கடத்தி வரப்பட்ட புறாக்கள், உளவு வேலைக்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பஞ்சாப் எல்லையில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்திற்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 153 புறாக்களை பொலிசார் பறிமுதல் செய்தனர்.

புறாக்களை கடத்தி வந்தவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்கள் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு அபராதமும் விதிக்கப்பட்டது.

இந்நிலையில், பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்ட அந்த புறாக்கள் வித்தியாசமான இளஞ்சிவப்பு அடையாளங்களுடன் சந்தேகப்படும்படியான வளையங்கள் மாட்டப்பட்டிருந்தது.

எனவே, எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் உள்ள நிலவரத்தை வேவு பார்த்து பாகிஸ்தான் உளவு அமைப்புகளுக்கு தெரிவிப்பதற்கு அந்த புறாக்களை பயன்படுத்த வாய்ப்பு உள்ளதாக சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து இவ்வழக்கு சி.ஐ.டி. பொலிஸாருக்கு மாற்றப்பட்டது. இந்த புறாக்கள் ரகசிய தகவல்களை கடத்துவதற்கு பயன்படுத்த சாத்தியக்கூறு உள்ளதா? என்பது குறித்து சி.ஐ.டி. பொலிஸார் தற்போது விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ஜம்மு-காஷ்மீரில் வான்வழி நடவடிக்கைகளுக்கு கடும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதால் தீவிரவாதிகள் பாதுகாப்பு நிலைகளை தாக்குவதற்கு வேறுவழிகளை பயன்படுத்தலாம் என உளவுத்துறை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com

TAGS: