கோவை அருகே பிடிபட்ட கேரள கழிவு லாரிகள் பிரச்சனை குறித்து உரிய விசாரணை தேவை!எஸ்.டி.பி.ஐ

a-hospital-wasteஎஸ்.டி.பி.ஐ. கட்சி மாநில தலைவர் கே கே எஸ் எம். தெகலான் பாகவி விடுத்திருக்கும் அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

“கேரளாவில் இருந்து தமிழக எல்லைப்பகுதியில் மருத்துவ கழிவுப் பொருட்கள் கொட்டப் படுவதாக  நீண்ட காலமாக பிரச்சனை எழுப்பபட்டு வருகிறது.இந்த நிலையில் கோவையில் எல்லையோர கிராமமான எட்டிமடையை சேர்ந்த மக்கள் நேற்று அதிகாலை ஒரே நேரத்தில் 24 லாரிகள் கேரள கழிவுப் பொருட்களை ஏற்றிக்கொண்டு வந்ததை தடுத்து நிறுத்தி வருவாய் மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.பின்னர் அந்த லாரிகாளை காவல் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர்.சோதனையில் அந்த லாரிகளில் மூட்டை மூட்டையாய் டன் கனக்கில் பிளாஸ்டிக் கழிவுகளும் கதிர்வீச்சு அபாயமிக்க மருத்துவ கழிவுகளும் இருப்பதை அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.எட்டிமடை கிராமத்தில் கேரள கழிவுப் பொருட்களை குவிப்பதற்கென்றே ஒரு பிரம்மாண்ட கிடங்கு செயல் பட்டிருப்பதையும் அதிகாரிகள் கண்டு பிடித்துள்ளனர்.அங்கே இரவு நேரத்தில் கேரள கழிவுகள் குவிக்கப் பட்டு வந்துள்ளன.

அந்த கிடங்கு சட்ட விரோதமாக செயல் பட்டு வந்திருக்கிறது.தமிழக கேரள எல்லையில் வாழையாறு என்ற இடத்தில் காவல் துறை சோதனை சாவடியும் எட்டிமடையில் RDO சோதனை சாவடியும் மற்றும் வணிக வரித்துறை சோதனை சாவடியும் என 3 சோதனை சாவடிகள் உள்ளன.இந்த சோதனை சாவடிகள் அனைத்தையும் கடந்து தமிழக எல்லைக்குள் கேரள கழிவுகள் கொட்டப் படுகின்றன.இப்படியென்றால் சோதனைசாவடி ஊழியர்களும் இந்த நாசகார கடத்தலுக்கு உடந்தையா என்ற கேள்வி எழுகிறது.லாரிகளை தற்போது பிடித்துள்ளது பொது மக்கள் தான்.அதிகாரிகளோ அரசு பணியாளர்களோ அல்ல.பிடிபட்ட லாரி ஓட்டுனர்களிடம் சோதனை சாவடிகளில் சோதனைக்கு உட்படுத்தப் பட்ட ரசீதுகள் இல்லை என்பதிலிருந்தே இதில் மிகப் பெரிய ஊழல் நடந்து வருவதை உணரலாம்.

இந்த கழிவுகளால் துர்நாற்றம், நோய் தொற்று கிருமிகள் பரவுதல், நீராதாரம் பாதிப்பு,பொது சுகாதாரகேடு என பல பிரச்சனைகள் இருப்பதால் இந்த ஊழல் குறித்து தமிழக அரசு உரிய விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்

-http://www.nakkheeran.in

TAGS: