நவம்பர் 1 முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமல்!

Riceதமிழகத்தில் நவம்பர் மாதம் 1ம் தேதி முதல் தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வரும் என அரசு அறிவித்துள்ளது.

மத்திய அரசு அறிவுறுத்தலை அடுத்து தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.  சட்டத்தை அமல்படுத்தினாலும் விலையில்லா அரிசி வழங்குவது தொடரும் என அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஒரு நபர் மட்டுமே உள்ளது குடும்பத்திற்கு மாதம் 12 கிலோ அரிசியும், 2 பேர் மட்டுமே உள்ள குடும்பத்திற்கு மாதம் 16 கிலோ அரிசியும் தற்போது உள்ளது போலவே தொடர்ந்து வழங்கப்படும்.   5 நபர்கள் உள்ள குடும்பத்திற்கு இனி 20 கிலோவுக்கு பதிலாக மாதம் 25 கிலோ அரிசியும், 7 நபர்கள் உள்ள குடும்பத்திற்கு 25 கிலோ அரிசியும், 10 பேர் உள்ள குடும்பத்திற்கு மாதம் 50 கிலோ அரிசியும் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.

இந்த சட்டத்தை செயல்படுத்துவதால் அரசுக்கு  ஆண்டுக்கு 1,193.30  கோடி கூடுதல் செலவாகும் என்று தெரிவித்துள்ளது.

-http://www.nakkheeran.in

TAGS: