இலங்கையிலிருந்து உள்நாட்டுப் போரின் போது அகதிகளாக இந்தியா வந்த லட்சக்கணக்கானோர், பல்வேறு பகுதிகளில் உள்ள அகதிகள் முகாம்களில் வசித்து வருகின்றனர். அவர்கள் மறு வாழ்வுபெறும் வகையில் தாயகம் திரும்புவதற்கான ஏற்பாடுகளை, ஐக்கியநாடுகள் சபையின் அகதிகள் மறுவாழ்வு ஆணையம் செய்து வருகின்றது. ஏராளமானோர் இதுவரையில் தமிழகத்திலிருந்து இலங்கை அனுப்பப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் இன்று திருச்சியிலிருந்து ஸ்ரீலங்கன் விமானம் மூலம் 40 பேர் இலங்கையில் உள்ள தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டுச் சென்றனர். இதில், திருச்சி கொட்டப்பட்டு முகாமிலிருந்து, ஸ்ரீகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் மற்றும் முருகானந்தம் மற்றும் அவரது குடும்பத்தினர் என 7 பேரும், வாழவந்தான்கோட்டை முகாமிலிருந்து, கார்த்திகேயன் மற்றும் ஜெயக்குமார் குடும்பத்தினர் 10 பேரும், ஈரோடு பவானிசாகர் முகாமிலிருந்து பொன்னையா, செல்வநாயகம், சியாமளா, புஷ்பமலர் குடும்பங்களைச் சேர்ந்த 11 பேர், சேலம் சித்தர்கோயில் முகாமிலிருந்து பிரேமானந்த் குடும்பத்தைச் சேர்ந்த 4 பேரும், கடலூர் மாவட்டம் விருத்தாசலம் முகாமிலிருந்து குகநாதன், தர்மபுரி மாவட்டம் தம்பளஹள்ளி முகாமிலிருந்து ராஜேஷ்வரன் மற்றும் சென்னை வெளியிடங்களில் தங்கியிருந்த சோதிலிங்கம் மற்றும் ராஜேஸ்வரி குடும்பங்களைச் சேர்ந்த 6 பேரும் அடங்குவர்.
-http://www.nakkheeran.in