பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரகத்தில் பணிபுரியும் அதிகாரி ஒருவரை நாட்டை விட்டு வெளியேறும்படி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் பணிபுரிந்து வந்த மெஹ்முத் அக்தர் என்பவர் உளவு வேலையில் ஈடுபட்டதாக 48 மணிநேர கெடுவில் அவர் இந்தியாவில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இதற்கு பழிதீர்க்கும் விதமாக பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதரக அதிகாரி ஒருவரை அங்கிருந்து வெளியேற அந்நாடு 48 மணிநேர கெடு விதித்துள்ளது.
இதற்கு இந்திய தூதரக அதிகாரி சுர்ஜித் சிங் என்பவர் உளவு பார்க்கும் பணியில் ஈடுபட்டதாக பாகிஸ்தான் அரசு காரணம் கூறியுள்ளது.
பாகிஸ்தானின் நிர்பந்தம் காரணமாக, சுர்ஜித் சிங் இந்தியா புறப்பட தேவையான பணிகளை மேற்கொண்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.
இது பாகிஸ்தான் அரசின் வழக்கமான பழிவாங்கும் நடவடிக்கையே என்று இந்திய வெளியுறவு அமைச்சகம் குற்றம்சாட்டியுள்ளது.
-http://news.lankasri.com