11,000 தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் அதிரடி ரத்து!

central-governmentடெல்லி: 11,000 தொண்டு நிறுவனங்களின் புதுப்பிக்காத உரிமங்களை ரத்து செய்துள்ளது மத்திய அரசு. மேலும் 25 தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை புதுப்பிக்கவும் மறுப்பு தெரிவித்துள்ளது.

வெளி நாடுகளிடமிருந்து நிதியுதவி பெறும் ஏராளமான தொண்டு நிறுவனங்கள் இந்தியாவில் செயல்பட்டு வருகின்றன. இவை ஜூன் மாதத்துக்குள் தங்களின் உரிமங்களை புதுப்பித்திருக்க வேண்டும்.

ஆனால் அவகாசம் கொடுத்தும் இதுவரை புதுப்பிக்காமல் இருந்த 11,000 தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்துள்ளது. மேலும் வெளி நாடுகளில் இருந்து பணம் பெற்று தேசத்துக்கு எதிராக செயல்பட்ட 25 தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை புதுப்பிக்க உள்துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

இந்த 25 தொண்டு நிறுவனங்களின் செயல்பாடுகள் குறித்து தீவிரமாக மத்திய அரசு கண்காணித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இவை வெளி நாடுகளில் இருந்து பணம் பெற்று அவற்றை நாட்டுக்கு எதிரான செயல்களுக்கு பயன்படுத்தியதாகவும் கூறப்படுகிறது.

இவற்றை தொடர்து செயல்பட அனுமதிப்பது நல்லலதல்ல என கருதி மத்திய அரசு அவற்றின் உரிமங்களை புதுப்பிக்க மறுத்துவிட்டது. தற்போது புதுப்பிக்க தவறிய பல தொண்டு நிறுவனங்கள் கடந்த 3 ஆண்டுகளாக தங்களின் வரவு செலவு கணக்குகளை அளிக்கவில்லை என்றும் உள்துறைஅமைச்சகம் தெரிவித்துள்ளது.கடந்த ஆண்டும் இதேபோல் புதுப்பிக்காத 10,000 தொண்டு நிறுவனங்களின் உரிமங்களை மத்திய அரசு ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.மத்திய அரசின் இந்த களையெடுப்பு நடவடிக்கையின் மூலம் தற்போது 25,000 தொண்டு நிறுவனங்கள் மட்டுமே வெளிநாடுகளில் இருந்து நிதி பெற்று வருகின்றன.
tamil.oneindia.com

TAGS: