தூயக் காற்றை சுவாசிப்பது பிறப்புரிமை.. போர் கொடி தூக்கிய டெல்லி மக்கள்

pollutionடெல்லி: டெல்லியில் அதிக அளவிற்கு காற்று ஏற்கனவே மாசடைந்துள்ள நிலையில், தீபாவளியின் போது வெடிக்கப்பட்ட பட்டாசால் எழுந்த புகை மிக மோசமான வகையில் டெல்லியை பாதித்துள்ளது. இதனால் அங்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசைக் கட்டுப்படுத்தக் கோரி டெல்லிவாசிகள் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

டெல்லியில் கடந்த 17 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான அளவில் பனிப்புகை மூட்டம் நிலவி வருகிறது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் காற்று மாசு அடைந்துள்ளதால் பனிப்புகை அதிகம்.

ஏற்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனால் குழந்தைகள் வீடுகளிலேயே தங்கி இருக்க வேண்டும் டெல்லி அரசு மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. மேலும், மோசமான பனிப்புகை காரணமாக தெற்கு டெல்லி, வடக்கு டெல்லி, கிழக்கு டெல்லி ஆகிய 3 மாநகராட்சிகளில் உள்ள அனைத்துப் பள்ளிகளுக்கும் நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் சுமார் 10 லட்சம் மாணவர்கள் படிக்கும் 1700 பள்ளிகள் மூடப்பட்டன. இந்நிலையில், சிறுவர்கள், சிறுமியர்கள், பெரியவர் என டெல்லியில் வசிக்கும் அனைவரும் காற்றில் ஏற்பட்டுள்ள மாசைக் கட்டுப்படுத்தக் கோரி டெல்லியில் உள்ள ஜன்தர் மன்தரில் ஒன்று ஊடி, அங்கிருந்து ஊர்வலம் நடத்தினர். ஊர்வலத்தின் போது சுத்தமான காற்றை சுவாசிப்பது தங்கள் உரிமை என்றும், அதனைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் முழங்களை எழுப்பினார்கள். இதுகுறித்து போராட்டக்காரர்கள், ஒவ்வொரு ஞாயிறும் காற்றில் ஏற்பட்டுள்ள மாசைக் கட்டுப்படுத்தக் கோரி, போராட்டம் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்கள். முன்னதாக, காற்றின் மாசைக் கட்டுப்படுத்த டீசல் வாகனங்கள் டெல்லி நகரத்திற்குள் நுழையக் கூடாது என்று தடைவிதிக்கப்பட்டது. மேலும், ஒன்றைப்படை எண் கொண்ட கார்கள் ஒரு நாளும், இரட்டைப்படை எண் கொண்ட கார்கள் ஒரு நாளும் நகரத்திற்குள் இயங்கவும் டெல்லியில் நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனாலும், டெல்லியில் ஏற்பட்டுள்ள காற்று மாசைக் கட்டுப்படுத்த முடியாமல், மேலும், மேலும் அதிகரித்து வருகிறது. இதனால் டெல்லி அரசும் திணறி வருகிறது.

tamil.oneindia.com

TAGS: