குஜராத் மாநிலத்தை சேர்ந்த வைர வியாபாரி ஒருவர், வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாத சுமார் 6,000 கோடியை அரசிடம் ஒப்படைத்துள்ளார்.
இந்தியாவில் கறுப்பு பணத்தை ஒழிப்பதற்காக பிரதமர் மோடி, 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்துள்ளதால், வருமான வரித்துறைக்கு கணக்கில் காட்டாமல் பணம் பதுக்கி வைத்திருந்த நபர்கள் அரசிடம் சிக்கி வருகிறார்கள்.
இந்நிலையில், ஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த வைர வியாபாரி லால்ஜிபாய் படேல் தன்னிடம் இருந்த ரூ.6000 கோடியை அரசிடம் அப்படியே ஒப்படைத்துள்ளார்.
இந்தத் தொகைக்கான வட்டி ரூ.1800 கோடி. வரியின் மீது 200 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் என்பதால் மேலும் ரூ.3600 கோடி வரி செலுத்த வேண்டும். அதன்படி ஒட்டுமொத்தமாக ரூ.5400 கோடி வரிபிடித்தம் செய்யப்பட உள்ளது. லால்ஜிபாய்க்கு ரூ.600 கோடி மட்டுமே மிஞ்சும்.
தாமாக முன்வந்து ரூ.6000 கோடியை அரசிடம் ஒப்படைத்திருக்கும் தகவல் சமூக வலைதளங்களில் அதிவேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
-http://news.lankasri.com


























நன்றி சார். அடுத்தமுறை (ஜனவரியில்) 600 கோடியில், கண்டிப்பாக 60 கோடி திருப்பி உங்களிடமே தரப்படும் சார். உங்களால் பல ஏழை மக்கள் நன்மை அடைவார்கள் சார் ….