அடிமேல் அடி: மீண்டும் மக்களுக்கு அதிர்ச்சி தந்த மோடி

001வங்கிகளில் இனிமேல் பழைய ரூபாய் நோட்டுகளை ரூ 2000 த்திற்கு மேல் மாற்ற முடியாது என பொருளாதார விவகாரத்துறை செயலர் சக்திகந்த தாஸ் அறிவித்துள்ளார்.

இந்தியாவில் கடந்த ஒரு வாரமாக ரூபாய் நோட்டு தடைகள் பிரச்சனை பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் தற்போது இது தொடர்பாக விவகாரத்துறை செயலர் சக்திகந்த தாஸ் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:
  • பயிர்கடனுக்காக விவசாயிகள் வங்கிகளில் வாரத்திற்கு 25 ஆயிரம் ரூபாய் பணம் எடுக்கலாம்.
  • பயிர் காப்பீட்டுக்கான பிரீமியம் தொகையைச் செலுத்த மேலும் 15 நாட்கள் நீட்டிக்கப்படுகிறது.
  • திருமணச் செலவுக்காக ஒரு வங்கிக்கணக்கில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் பணம் எடுக்கலாம்.
  • நாளை (நவ.18) முதல் வங்கி கவுண்டரில் பழைய நோட்டுகள் மாற்றுவதற்கான வரம்பு ரூ.4500லிருந்து ரூ.2000ஆகக் குறைகிறது
  • பதிவு செய்த வர்த்தகர்கள் ஒரு வாரத்திற்கு 50,000 ரூபாய் வரை பணம் எடுத்துக் கொள்ளலாம்.
  • மத்திய அரசு ஊழியர்கள் தங்களது நவம்பர் மாத சம்பளத்தில் இருந்து ரூ.10,000 வரை எடுத்துக்கொள்ளலாம். இது ‘சி’ கிரேடு ஊழியர்களுக்கு மட்டும் பொருந்தும்.
  • நாடு முழுவதும் உள்ள ஏடிஎம் மையங்களை புதிய ரூபாய் நோட்டுக்களுக்கு ஏற்றவாறு மறுவடிவமைப்பு செய்ய ஏற்பாடுகள் முடிக்கிவிடப்பட்டிருக்கிறது. விரைவில் இந்த பணி முடிக்கப்படும்.

மேலும், இன்னும் பல்வேறு அறிவிப்புகள் வெளிவரும் என தெரிவித்துள்ளார்.

-http://news.lankasri.com

TAGS: