ஸ்வாதி கொலை வழக்கில் கைதாகி சிறைச்சாலையில் மரணமடைந்த ராம்குமார் மரணத்தில் தொடர்ந்து மர்மங்கள் நீடித்து வருகின்றது.
சிறையில் மரணமடைந்த ராம்குமாரின் உடல் கடந்த அக்டோபர் 1ம் திகதி பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் 40 நாட்கள் கடந்தும் பிரேத பரிசோதனை குறித்த தகவல்கள் ஏதும் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்படவில்லை.
இத்தனை நாட்கள் ஆகியும் பிரேத பரிசோதனை குறித்த தகவல்கள் வெளியிடாதது மர்மமாகவே உள்ளது. இதனால் அதில் என்ன இருக்கும் என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்துள்ளது.
இந்நிலையில் மருத்துவர் ஒருவர் ராம்குமார் மரணம் குறித்து பல்வேறு திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளார்.
அவர் கூறுகையில், ராம்குமார் சிறையில் மின்சாரக் கம்பியை கடித்து இறந்துவிட்டதாகவே பொலிசார் வழக்குப் பதிவு செய்துள்ளது. ஆனால் நாங்கள் நன்றாக பரிசோதனை செய்துவிட்டோம்.
வாயில் மின்சாரம் தாக்கியதற்கான எந்தவித தடயமும் இல்லை. ஆனால் இடது பக்க மார்பில் மேலும், கீழுமாக ஸ்க்ரூ டைப்பில் இரண்டு காயங்கள் உள்ளன.
தவிர, வலதுகை தோள்ப்பட்டையில் பிறாண்டியது போன்ற காயம், தாடைப் பகுதியில் காயமும் இருந்தது.
இதை வைத்து பார்த்தால், மின்சாரமானது நெஞ்சுப் பகுதியில் தான் பாய்ந்துள்ளது. அதனால், நெஞ்சுப்பகுதியில் Electrocution என்று தான் பி.எம். ரிப்போர்ட்டில் எழுதியுள்ளோம்.
மேலும், யாராவது கொலை செய்து கரண்ட் ஷாக் வைத்திருந்தால் ஹிஸ்டோபெத்தாலஜி ரிப்போர்ட்டில் தெரிந்துவிடும். உணவில் ஏதாவது கலந்து கொடுத்து கொலை செய்திருந்தால் விஸ்ரா ரிப்போர்ட்டில் முழுமையாகத் தெரியும்.
ஆனால், சம்பந்தப்பட்டவரை மயக்கமடைய வைத்து கரண்ட் ஷாக் கொடுத்து கொலை செய்திருந்தால் எந்த ரிப்போர்ட்டி லும் கண்டுபிடிப்பது சிரமம்.
இதனை காவல்துறையின் உண்மையான ஸ்பாட் இன்வெஸ்டிகேஷனில் மட்டுமே கண்டுபிடிக்க முடியும் என்று அதிர்ச்சி கொடுத்துள்ளார்.
-http://news.lankasri.com