விவசாயம் பொய்த்ததால் பட்டுக்கோட்டை அருகே விவசாயி மாசிலமாணி எலிக்கு வைத்த விஷ மாத்திரைகளை தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தால விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
போதுமான மழை பெய்யாததாலும் காவிரி நீரை கர்நாடக அரசு திறந்துவிட மறுப்பதாலும் தமிழகத்தில் விவசாயம் பொய்த்துப் போனது. ஈரோடு மற்றும் தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் விவசாயம் பொய்த்து போனதால் 11 விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளனர்.
இந்த விவசாய குடும்பங்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது தமிழக அரசியல் கட்சிகள், விவசாயிகளின் கோரிக்கை. இதனிடையே பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன்கோட்டை உக்கடை விவசாயி மாசிலமாணி நேற்று எலிக்கு வைத்திருந்த விஷமாத்திரைகளைத் தின்று தற்கொலை செய்திருக்கிறார்.
விவசாயம் பொய்த்து போனதால் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாத விரக்தியில் அவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இது தொடர்பாக கருத்து தெரிவித்த அனைத்து விவசாயிகள் ச்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர். பாண்டியன், இது பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளடு. இனியும் தமிழக அரசு மவுனம் காக்க கூடாது என்றார்.
-http://tamil.oneindia.com