ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மசால வியாபாரி ஒருவரது வங்கி கணக்கில் ரூ.10 கோடி வரவு வைக்கப்பட்டிருந்ததை பார்த்து வங்கி அதிகாரிகள் மட்டுமல்ல மசாலா வியாபாரியும் அதிர்ச்சியில் உறைந்துள்ளார்.
கிரிடி மாவட்டத்தை சேர்ந்த திவாரி என்பவர் மசாலா வியாபாரி ஆவார். இவர் தனது வங்கி கணக்கில் ரூ.45,000 சேமித்து வைத்திருந்துள்ளார்.
இந்நிலையில், தனது செலவுக்கு பணம் எடுப்பதற்காக வங்கிக்கு சென்ற இவர், செல்லானில் ஆயிரம் என நிரப்பி அதனை வங்கி அதிகாரியிடம் கேட்டுள்ளார்.
வங்கி அதிகாரி இவரது வங்கி கணக்கை பார்த்ததில், அதில் ரூ.10 கோடி வரவு வைக்கப்பட்டிருந்தது. உங்களுக்கு 10 கோடி எப்படி வந்தது என வங்கி அதிகாரி கேட்டுள்ளார்.
இந்த கேள்வியால் அதிர்ச்சியடைந்த திவாரி, எனக்கு எதுவும் தெரியாது, நான் ஒரு சாதாரண வியாபாரி, என்னுடைய வங்கியில் இவ்வளவு தொகை எப்படி வந்தது என்று எனக்கே தெரியாது என கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வங்கி அதிகாரிகள் கொடுத்த தகவலின் பேரில் பொலிசார் பப்புகுமார் திவாரியிடம் விசாரணை நடத்தினார்கள். மேலும், பப்புகுமாரின் சேமிப்புக் கணக்கும் முடக்கப்பட்டது.
ரூபாய் நோட்டுக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் கருப்புப் பணத்தை பப்புகுமார் கணக்கில் யாரும் போட்டுவிட்டு சென்றிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
-http://news.lankasri.com