செல்லாத ரூ.500, ரூ.1000 நோட்டுகளை வங்கிகள், தபால் நிலையங்களில் கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற்றுக் கொள்வதற்கு மத்திய அரசு ஏற்பாடு செய்தது.
அந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைகிறது. இனி வங்கி கணக்குகளில் மட்டுமே பழைய ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்ய முடியும்,
வங்கி மற்றும் தபால் நிலையங்களில் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற இன்று கடைசி நாள் என்பதால் கூட்டம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்று பழைய ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி மின்சாரம் மற்றும் சொத்துவரி செலுத்தவும் இன்று கடைசி நாளாகும்.
அதே சமயத்தில் தங்கள் கைவசம் உள்ள செல்லாத 500, 1,000 ரூபாய் நோட்டுகளை தங்களது வங்கி கணக்கில் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி வரை பொதுமக்கள் செலுத்தலாம்.
வங்கி கணக்கு இல்லாதவர்கள் புதிதாக கணக்கு தொடங்கி, செல்லாத ரூபாய் நோட்டுகளை வங்கியில் செலுத்தலாம்.
பெட்ரோல் பங்க்குகளிலும் இன்று கடைசி நாள் என்பதால் பழைய ரூபாய் நோட்டுகளை மாற்றுவதில் சிக்கல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-http://news.lankasri.com