ரூபாய் தட்டுப்பாடு… டிசம்பர் முதல் நிலைமை சீராகும்: எஸ்பிஐ தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா

001கோவை: ரூபாய் தட்டுப்பாட்டு பிரச்சனை டிசம்பர் முதல் சீராகும் என்று பாரத ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார். கோவையில் இன்று செய்தியாளர்களிடம் அருந்ததி பட்டாச்சார்யா கூறியதாவது: அரசின் நடவடிக்கையால் அதிக பணம் வைத்திருப்பவர்கள்தான் பாதிக்கப்படுவர்; கருப்புப் பணத்தை குறைக்கவே அரசு இத்தகைய நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

சென்னையில் ரூ500

நோட்டுகள் கடந்த 15 நாட்களில் 1 லட்சத்து 20 ஆயிரம் கோடி எஸ்பிஐ வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் இன்று முதல் ரூ500 நோட்டுகள் கிடைக்கும்.

டிசம்பர் முதல் சீராகும்

புதிய ரூ500 நோட்டுகள் நாடு முழுவதும் கிடைப்பதற்கு ரிசர்வ் வங்கி நடவடிக்கை எடுத்து வருகிறது. ரூபாய் நோட்டு பிரச்சனை டிசம்பர் முதல் சீராகும்.

ஏடிஎம்கள் மாற்றியமைப்பு

புதிய 500 ரூபாய் நோட்டுகளை வைக்க ஏடிஎம் இயந்திரங்கள் முழுவதுமாக மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. சில்லறை பிரச்சனை விரைவில் சரியாகிவிடும்.

இணைய பரிவர்த்தனை

இணைய பரிவர்த்தனை தற்போது மிகவும் அதிகரித்துள்ளது. ஸ்வைப் இயந்திரங்களுக்கான தேவை தற்போது அதிகரித்துள்ளது.

மல்லையா விவகாரம்

தொழில் அதிபர் விஜய் மல்லையாவின் கடன் தள்ளுபடி செய்யப்படவில்லை. கடன் பாக்கி அனைத்தையும் பெற பாரத ஸ்டேட் வங்கி கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு அருந்ததி பட்டாச்சார்யா கூறினார்.

tamil.oneindia.com

TAGS: