பேய் நகரம் தனுஷ்கோடி! வரலாற்று பதிவு

rameswaramneeewwகடும்புயலால் தனுஷ்கோடி நகரம் அழிந்துவிட்டாலும், இன்றுவரை சுற்றுலாப்பயணிகளை ஈர்க்கும் சிம்ம சொப்பனமாய் இருக்கிறது.

போக்குவரத்து வசதிகள் சரியான முறையில் இல்லாவிட்டாலும், ராமேஷ்வரத்திற்கு சுற்றுலா செல்லும் பயணிகள், தனுஷ்கோடியை பார்க்காமல் திரும்பி வரமாட்டார்கள்.

ராமேஸ்வரம் முகுந்தராயர் சத்திரத்திலிருந்து தனுஷ்கோடிக்கு சாலை வசதி இல்லை. இதனால் 52 ஆண்டுகளாக சுற்றுலா பயணிகள் கடலோர மணல் பரப்பில் வேன், ஜீப்பில் தனுஷ்கோடி, அரிச்சல்முனைக்கு செல்கின்றனர்.

முகுந்தராயர் சத்திரம் முதல் அரிச்சல்முனை கடற்கரை வரை மணல் பரப்பில் 4 அடி வரை கடல் நீர் தேங்கியுள்ளது.

இதன் மீது செல்லும் வேன்கள் மணலில் புதைந்து விபத்துக்குள்ளாகும் அபாயம் உள்ளது. இதை உணராமல் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல் வேன்களில் தனுஷ்கோடி செல்கின்றனர்.

சுற்றுலா பயணிகள் நலன் கருதி தனுஷ்கோடி வரையிலான புதிய சாலையை திறக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலா ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

கடந்த 20 ஆம் திகதி திருநெல்வேலி பகுதியை சேர்ந்த 17 பேர் தனியார் வேன் மூலம் தனுஷ்கோடி சென்று விட்டு திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திடீரென கடல் நீர் பெருக்கெடுத்ததால் பயணிகளுடன் வேன் சிக்கி கொண்டது.

நீர்மட்டம் உயர்ந்து கொண்டே இருந்ததால் பயணிகள் அச்சத்தில் கூச்சலிட்டனர்.

கூச்சல் சத்தத்தை கேட்ட அப்பகுதி மீனவர்கள் மாற்று வாகனங்களுடன் சென்று கடல் நீரில் சிக்கிய பயணிகளை மீட்டுள்ளனர்.

நவம்பர் மாதம் என்பதால், ராமேஸ்வரத்தில் சூறாவளி காற்றுடன் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இதனால் கடல் கொந்தளிப்பால் ராட்சத அலைகள் எழுகிறது.

இதன் விபரீதத்தை அறிந்துகொள்ளாமல் சுற்றுலாப்பயணிகளும் தனுஷ்கோடிக்கு படையெடுக்கின்றனர்.

-http://news.lankasri.com

TAGS: