விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் 62வது பிறந்த நாளை, உலகெங்கும் உள்ள தமிழ் அமைப்புகள் இன்று கொண்டாடி வருகின்றன.
இந்நிலையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வீட்டில் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
நாம் தமிழர் கட்சியின் குருதி பாசறை சார்பில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் நேற்று ரத்ததான முகாமும் நடத்தப்பட்டது.
இதில் கிட்டத்தட்ட 60க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு ரத்தம் வழங்கினர்.
அதேபோல் கோவை காந்திபுரத்தில் உள்ள பெரியார் படிப்பகத்தில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர், பட்டாசு வெடித்தும் கேட் வெட்டியும் பிரபாகரனின் பிறந்தநாளை வெகுசிறப்பாக கொண்டாடினர்.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த அமைப்பின் மாநில பொதுச் செயலாளர் கு.ராமகிருஷ்ணன், இலங்கையில் பிரபாகரன் தலைமையில் விரைவில் தனி ஈழம் அமையும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
மேலும், பிரபாகரனின் பிறந்த நாளை முன்னிட்டு இங்கு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளை பொலிசார் கிழித்திருப்பது தமிழர்களின் உரிமையை பறிக்கும் செயல் என்று கண்டனங்களையும் தெரிவித்தார்.
-http://news.lankasri.com