குடும்பத்தினரின் பசியை போக்க குடும்பக் கட்டுப்பாடு செய்த நபர்

001உத்திரபிரதேச மாநிலத்தில் கூலித்தொழிலாளி ஒருவர் குடும்ப பசியை போக்குவதற்காக குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டார்.

புரண் சர்மா(45) என்பவருக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். இவர் அன்றாடம் கூலித்தொழில் செய்து தனது குடும்பத்தை காப்பாற்றி வருகிறார்.

இந்நிலையில், 500, மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவித்த மறுநாள் முதல் புரணுக்கு கூலி வேலை கிடைக்கவில்லை.

கையில் இருந்த பணமும் காலியாகிவிட்டதால், குடும்பத்தினர் பசியைப் போக்க அக்கம், பக்கம் கடன் கேட்டவருக்கும் பணம் கிடைக்கவில்லை.

அப்போது, உத்திரபிரதேச அரசு சார்பில் கேர் தாலுகாவில் குடும்பக் கட்டுப்பாடு சிகிச்சை முகாம் நடைபெற்று வந்தது.

இதில், குடும்பக் கட்டுப்பாடு செய்யும் ஆணுக்கு ரூ.2000 மற்றும் பெண்ணுக்கு ரூ.1400-ம் கிடைப்பதாக அறிந்துள்ளார்.

தனது மனைவியின் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு அறுவை சிகிச்சை செய்ய முடியாது என்பதால், உதவித்தொகைக்காக புரண் சர்மா குடும்ப கட்டுப்பாடு செய்துகொண்டார்.

-http://news.lankasri.com

TAGS: