நவம்பர் 8 ஆம் தேதி முதல் பிரதமர் மோடி பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளைச் செல்லாது என்று அறிவித்ததில் இருந்து மக்கள் பல சிரமங்களை சந்தித்துவருகின்றனர். எனவே நாம் இதில் இருந்து என்ன பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும் என்று இங்குப் பார்ப்போம்.
பணத்தை முதலீடு செய்யுங்கள்
3 முதல் 6 மாதங்கள் வரை சம்பாதித்த பணத்தைச் சேமிப்பு என்ற பெயரில் குறைந்த கால முதலீடுகள், சேமிப்பு கணக்குகள், நிரந்தர வைப்பு நிதி திட்டங்கள் போன்றவற்றில் முதலீடு செய்ய வேண்டும். மேலும் நீங்கள் சேமிக்கும் திட்டங்கள் அவசரக் காலங்களில் எளிதாக எடுக்கக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். பணம் இல்லா பரிவர்த்தனை போன்றவற்றைச் செய்ய கற்றுக்கொள்ள வேண்டும்.
குழந்தைகளுக்கு உண்டியல்
உங்கள் குழந்தைகளுக்கு உண்டியல் ஒன்றை அளித்து அதில் நீங்கள் வருக்கு அளிக்கும் பணத்தை சேமிக்க கற்றுத்தர வேண்டும். பின்னர் அவர்கள் ஏதேனும் பொருள் வாங்கித் தர கேட்கும் போது அதற்கான இலக்கைக் கொடுத்து அவர்களிடம் சிறிது சிறிதாக பணத்தை அளித்து உண்டியில் சேமிக்க வைக்க வேண்டும். பின்னர் அதன் மூலம் அவர்கள் சம்பாதித்த பணத்தை வைத்து அவர்கள் கேட்கும் சாதனங்களை வாங்கி அளிக்கும் போது பணத்தை எப்படிச் சேமிப்பது, சேமிப்பில் இலக்கு என்றால் என்ன என்று அவர்கள் கற்றுக்கொள்வர்.
நெருக்கடி காரணத்திற்காக காத்திருக்காதீர்கள்
ஒவ்வொரு நிதி திட்டங்களின் பின்னோக்கமும் சேமித்து செலவு செய்ய வேண்டும் என்பதே ஆகும். இப்போது உள்ள நெருக்கடியான சூழலில் சேமிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கவும். முக்கியமா சமயங்களில் பணத்தைச் செலவு செய்ய வைத்திருப்பது நல்லது தான், ஆனால் அது சேமித்த பணம் அல்லது முதலீட்டுப் பணமாக இருக்கலாம்.
அவசரப் பட வேண்டும்
இப்போது உள்ள ரூபாய் நோட்டுகள் செல்லது பொன்றச் சூழல்களில் அவசரப்பட்டு தங்கத்தை வாங்குவது போன்ற ரிஸ்க்குகளை தவிர்க்கவும்.
தொழில்நுட்பங்களை பயன்படுத்தவும்
மொபைல் வாலெட்டுகள், இணையதள வங்கி சேவை, மொபைல் பேங்கிங் போன்றவற்றைப் பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்.