புயல் வலுவடைந்தது! இன்று முதலே கனமழைக்கு வாய்ப்பு- மக்களுக்கு ஓர் அவசர எச்சரிக்கை

001சென்னையை நோக்கி வரும் புயல் டிசம்பர் 2ம் திகதி கரையை கடக்கும் என்றும், இதனால் தமிழகம் மற்றும் புதுவையில் நாளை கனமழை பெய்யக்கூடும் என்றும் இந்திய வானிலை ஆய்வும் மையம் எச்சரித்துள்ளது.

வானிலை மையம் இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில், வங்க கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவெடுத்துள்ள நிலையில், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும்.

தமிழக கடலோர மாவட்டங்களில் இன்று இரவு முதல் அநேக இடங்களில் கனமழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வானிலை மையத்தில் புயல் எச்சரிக்கையை அடுத்து சென்னை, புதுச்சேரி, பாம்பன் துறைமுகங்களில் 1ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

இந்தத் தாழ்வு மண்டலம் புயலாக மாறி டிசம்பர் 2ஆம் தேதி சென்னை – வேதாரண்யம் அருகே கரையைக் கடக்கக் கூடும் என அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும், கடலோர பகுதிகளில் மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் சில சமயத்தில் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்று வீசலாம்.

இதனால் இன்று இரவு முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு புயல் எச்சரிக்கை அறிவிப்பு வெளியிட்டாலும் கடந்த ஆண்டைப் போல வெள்ளம் வர வாய்ப்பு இல்லை என்று வானிலை ஆய்வாளர்கள் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

-http://news.lankasri.com

TAGS: