திருச்சியில் உள்ள தோட்டா தயாரிக்கும் தொழிற்சாலையில் படுபயங்கரமான வெடிவிபத்து ஏற்பட்டதில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
திருச்சி மாவட்டம் துறையூர் அருக்கெயுள்ள முருகப்பட்டியில் தனியாருக்கு சொந்தமான தோட்ட தொழிற்சாலை இயங்கி வருகிறது.
சுமார் 25 ஆண்டுகளாக இயங்கி வரும் இந்த தொழிற்சாலையை சுற்றியுள்ள பகுதிகளுக்கு நிலத்தடி நீர் மாசுபாடு, சுகாதர சீர்கேடு போன்ற பல்வேறு பிரச்சனைகளால் வெடிமருந்து கம்பெனியை அகற்றக் கூறி பொது மக்கள் பல முறை போரட்டம் நடத்தி வந்தனர்.
இந்நிலையில், இந்த தொழிற்சாலையின் ஒரு அலகு இன்று அதிகாலை பயங்கரமான சத்ததுடன் வெடித்து தரைமட்டமாகியுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் பலர் விபத்தில் சிக்கியுள்ளதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது.
விபத்து குறித்து அறிந்த மீட்பு படையினர் 10 ஆம்புலன்ஸ் வாகனங்களும், 3 தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு வருகின்றனர்.
மேலும், அப்பகுதியில் கணமழை பெய்து வருகிற காரணத்தால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, மற்றொரு அலகும் வெடிக்கும் அபாயம் இருப்பதால் அப்பகுதி மக்களை அருகே நெருங்க விடாமல் பாதுகாப்பு வளையம் அமைத்துள்ளனர்.
இந்த விபத்தில் இறந்து போனவர்களில் பெரும்பாலானோர் உடல் சிதறி அதாவது முழுமையான உடல் கிடைக்க முடியாது நிலையில் பரிதாபமாக உயிரிழந்தனர்.
அந்த இடங்களில் முற்றிலும் சோதனை செய்யப்பட்டு இடிபாடுகளை நீக்கிய பிறகு உயிரிழப்புகளின் எண்ணிக்கை தெரியவரும் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
-http://news.lankasri.com