திருமணமான பெண்களிடம் அதிகபட்சமாக 62 சவரன் அதாவது 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம் என இந்திய அரசின் நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் கருப்பு பணத்தை ஒழிக்கும் நோக்கில் 500,1000 ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டதிலிருந்தே மத்திய அரசு பல அதிரடி அறிவிப்புகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது மத்திய அரசின் முக்கிய அறிவிப்பில், தங்கம் தொடர்பாக 1916ன் கீழ் ஏற்கனவே உள்ள விதிகள் தொடரும்.
அதன்படி, திருமணமான பெண்களிடம் அதிகபட்சமாக 62 சவரன் அதாவது 500 கிராம் தங்கமும், மணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும், ஆண்களைப் பொறுத்தவரை 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் பிரச்சனையில்லை.
அதே சமயம், அதிகப்படியாக தங்கம் வைத்திருப்பவர்கள் தங்கள் வருமான வரி கணக்கின் படி வைத்திருந்தால், அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்படாது எனவும் வருமான வரித்துறை சோதனையின் போது பிடிபடும் கூடுதல் தங்கத்துக்கு 60% வரி விதிக்கப்படும் அதில் கூறப்பட்டுள்ளது.
-http://news.lankasri.com