வங்கிகளில் நீண்ட வரிசையில் மக்கள்: மத்திய அமைச்சரின் அலட்சிய கருத்து

arun-jetlyதங்களின் சொந்த பணத்தையே வங்கிகளில் பல மணி நேரம் காத்திருந்து பெற்றுக்கொண்டு செல்லும் மக்களை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி கிண்டலடித்துள்ள சம்பவம் பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரூபாய் நோட்டு செல்லாது என்ற அறிவிப்புக்கு பிறகு மக்கள் தங்கள் அன்றாட அலுவல்களை தியாகம் செய்துவிட்டு ஏடிஎம்களில் தவம் கிடக்கிறார்கள்.

மழை, வெயில் என பாராமல் அவர்கள் கஷ்டம் தொடர்ந்தபோதும், இன்னும் உரிய பணம் கைக்கு வரவில்லை. இந்த நிலையில் அருண் ஜேட்லியின் கருத்து எரியும், கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போல அனைந்துள்ளது.

தனியார் செய்தி ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பிரத்யேகமான பேட்டியில், நவம்பர் 8ம் திகதி இருந்த அளவுக்கு பணப்புழக்கம் இனி இந்தியாவில் இருக்காது. எல்லாமே பணமற்ற பரிவர்த்தனையாக மாறும் என கூற முடியாது. ஆனால் பெரும்பாலான புழக்கம் பணமற்றதாக இருக்கும்.

மொத்த மதிப்பில் 85 சதவீதம் ஆயிரம், ஐநூறு ரூபாய் நோட்டுக்களாக இருந்த நிலையில், திடீரென அவற்றுக்கு தடை விதித்தது மக்களுக்கு பாரமாகிவிட்டதே, ஏடிஎம்களிலும், வங்கிகளிலும், மக்கள் கியூவில் நிற்க வேண்டியுள்ளதே என்ற கேள்விக்கு பதிலளித்த ஜேட்லி,

இந்தியா போன்ற மக்கள் தொகை மிகுந்த ஒரு நாட்டில் ஒரு திட்டத்தை கொண்டுவரும்போது, அதில் கியூ இருக்கத்தான் செய்யும். ஆனால், மக்கள் அரசுக்கு சிறப்பாக ஒத்துழைக்கிறார்கள். சமூக கொந்தளிப்பு என்ற ஒரு நிலை நாட்டில் கிடையாது என்றார்.

மேலும், பணமதிப்பிழப்பு என்பது அரசியல் நிதி பயன்பாட்டை வெளிப்படையாக்கிவிடும். இப்போது 3 முறை வரி விதிப்பு ஆய்வு நடக்கிறது. வருங்காலத்தில் இது ஒரே முறைதான் நடக்கும். மக்களுக்கு இதனால் நன்மைகளே அதிகம் என்பதால், ரூபாய் நோட்டு விவகாரம் அவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை இவ்வாறு அருண் ஜேட்லி தெரிவித்தார்.

-http://news.lankasri.com

TAGS: