தன்னுடைய ஏழு வயதில் தீக்காயம் ஏற்பட்ட பெண் ஒருவருக்கு அறுவை சிகிச்சை செய்த சிறுவன் தற்போது புற்றுநோய்க்கான மருந்துகளை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் விடயம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆக்ரித் ஜஸ்வால், இவர் தான் இன்று உலகம் போற்றும் ஜீனியஸாக எல்லோராலும் இன்று புகழப்படுகிறார்.
1993ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் திகதி இந்தியாவில் உள்ள ஹிமாசல பிரதேசத்தில் இவர் பிறந்தார்.
பத்து மாத குழந்தையாக இருக்கும் போதே நடக்கவும், பேசவும் ஆரம்பித்து பெற்றோரை ஆச்சரியபடுத்தினார் ஆக்ரித்.
அவருக்கு ஐந்து வயதாகிய போது மருத்துவம் சம்மந்தமான புத்தகங்களையும் ஷேக்ஸ்பியரின் புத்தகங்களையும் படிக்கத் தொடங்கினார்.
தனது ஆறு வயதில் தன் வீட்டருகில் இருக்கும் மருத்துவமனைகளுக்கு சென்று அங்கு மருத்துவர்கள் செய்யும் ஆப்ரேஷன்கள், அறுவை சிகிச்சைகளை பார்ப்பதை வாடிக்கையாக்கி கொண்டார் ஆக்ரித்.
அவருக்கு ஏழு வயதான போது அவர் வசிக்கும் பகுதியில் ஒரு எட்டு வயது சிறுமிக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.
அதில் அந்த சிறுமியின் விரல்கள் தனியாக தொங்கி கொண்டிருந்தது. அந்த சிறுமிக்கு ஏழு வயதேயான ஆக்ரித் அறுவை சிகிச்சை செய்து அவர் விரலை பழைய நிலைக்கு மாற்றி எல்லோரையும் வியப்பில் ஆழ்த்தினார்.
13 வயதிலேயே ஆக்ரித்க்கு 146 IQஇருந்தது. இது அவர் வயது சிறுவர்களை விட பல மடங்கு அதிகமாகும்.
அவரின் இந்த அபார ஆற்றலை பார்த்து அவரின் 12 வயதிலேயே அவருக்கு மருத்துவம் படிக்க அழைப்பு வர பி.எஸ்.ஸி பட்டப்படிப்பை முடித்து விட்டு தனது 17 வயதில் முதுநிலை வேதியியல் பட்டப்படிப்பையும் அவர் முடித்தார்.
அவரின் அபார திறன் உலக புகழடைய லண்டனிலிருந்து மருத்துவ ஆராய்சியாளர்கள் அவரை அழைக்க அவர் போய் அவர்களை சந்தித்துள்ளார்.
புற்றுநோய்க்கு மருந்து கண்டு பிடிப்பதையே தன் வாழ்க்கை லட்சியமாக கொண்டு செயல்படும் ஆக்ரித் கூறுகையில், என் எட்டு வயதிலிருந்தே நான் புத்தகம், இணையம் மூலம் புற்றுநோய் மருந்துகான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறேன்.
சரியாக எந்த மரபு கோளாறால் அது ஏற்படுகிறது, அதற்கான தீர்வு போன்ற ஆராய்ச்சியில் தான் உள்ளதாகவும், சீக்கிரம் அதை செய்து முடிப்பேன் எனவும் கூறியுள்ளார்.
தற்போது 24 வயதாகும் ஆக்ரித் ஆராய்ச்சியில் ஈடுபட்டு கொண்டே ஐஐடியில் மருத்துவ படிப்பான பயோ இன்ஜினியரிங் படித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
-http://news.lankasri.com