புதுடில்லி:வங்கிகளில் செலுத்தப்படுவதாலேயே ஒருவர்கருப்புப் பணத்தை வெள்ளையாக்க முடியாது என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி எச்சரித்தார்.
இதுகுறித்து டில்லியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:கணக்கில் வராத பணத்தை வங்கிகளில் செலுத்தினால் மட்டும் அந்தப் பணத்தை சட்டப்பூர்வமானதாக மாற்றிவிட முடியாது.அந்தப் பணத்துக்கு வரி செலுத்த வேண்டும். வங்கிகளில் செலுத்தப்படும் அதிக மதிப்பிலான ரொக்கத்தை வருமான வரித் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
புதிய ரூ.500 வரவால் சிக்கல் தீரும்
புதிய ரூ.500 தாள்களின் விநியோகத்தை ரிசர்வ் வங்கி அதிகரித்துள்ளது. தற்போது நிலவிவரும் சூழல் விரைவில் சரியாகிவிடும் என்றார் அருண் ஜெட்லி.பெருமதிப்பு ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்குப் பிறகு ஏற்பட்டுள்ள பிரச்னைகள் குறித்து மாநில நிதி அமைச்சர்களுடன் அவர் டில்லியில் சனிக்கிழமை(நேற்று) கந்தாலோசனை நடத்தினார்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, கடந்த மாதம் 27-ஆம் தேதி வரை ரூ.8.45 லட்சம் கோடி பழைய ரூ.500, ரூ.1000 நோட்டுகள் வங்கிகளில் செலுத்தப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
-http://www.dinamalar.com