அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நிலை குறித்த தகவலால், மருத்துவமனையின் இரண்டாவது தளம் பரபரப்படைந்தது.
மாலை 5 மணிக்கு, முதல்வர் ஜெயலலிதாவிற்கு திடீர் மாரடைப்பு ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின.
மாலை 5.30 மணியவில், மூத்த அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் அப்போலோ விரைந்தனர்.
மாலை 6 மணிக்கு, அப்போலோ மருத்துவமனை அருகே அ.தி.மு.க தொண்டர்களும், பெருந்திரளான தொண்டர்களும் குவிந்தனர்.
இரவு 7 மணி: அசாதாரணமாக சூழ்நிலையைத் தொடர்ந்து, தமிழக காவல்நிலையங்களுக்கு அப்போலோவில் இருந்து உத்தரவு வெளியானது.
இரவு 8 மணி : அ.தி.மு.க தொண்டர்கள் பெருந்திரளாக அப்போலோ முன்பு குவியத் தொடங்கினர். இரவு
ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், தீவிர சிகிச்சை அளிக்கப்படுவதாகவும், இரவு 9.00 மணிக்கு, அப்போலோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டது.
இரவு 10 மணி : ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் கேட்டறிந்தனர்.
இரவு 11.30 மணிக்கு மும்பையில் இருந்து, தமிழக பொறுப்பு ஆளுநர் வித்யாசாகர் ராவ், சென்னை விமான நிலையம் வந்தார்.
12.03 மணியளவில் விமான நிலையத்தில் இருந்து அப்போலோ மருத்துவமனைக்கு வந்தார் ஆளுநர்.
12.15 மணியளவில் கிண்டி ஆளுநர் மாளிகைக்கு திரும்பிய ஆளுநர், மூத்த அமைச்சர்கள், உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை
அதிகாலை 1.00 மணி தொடர்ந்து அ.தி.மு.க தொண்டர்கள் அப்போலோவின் குவிந்து வருகின்றனர்.
ஆனால் உறவினர்களுக்கோ அனுமதி மறுக்கப்பட்டு வருகின்றது.
இது தொடர்பில் தெரியவருவதாவது,
அதிமுக தொண்டர்கள் அங்கு குவிந்து வரும் இந்நிலையில் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவுக்கு அப்போலோவில் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் மருத்துவமனை கேட் முன்பு நின்று கொண்டிருக்கிறார். தீபா கடந்த முறை அப்போலோ சென்ற போதும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
இதுகுறித்து தீபா கூறுகையில்,
” அத்தைக்கு உடல்நிலை சரியில்லை என கேள்விப்பட்டதுமே மருத்துவமனைக்கு வந்துவிட்டேன். முதல்வரின் அண்ணன் மகள் நான் என போலீஸ் உயர் அதிகாரியிடம் தெரிவித்தும் என்னை மருத்துவமனைக்குள் அனுமதிக்கவில்லை. ரத்தபந்தமான என் அத்தையை கூட பார்க்க அனுமதிக்க மறுக்கிறார்கள். எப்படியாவது அத்தையை பார்த்துவிட வேண்டும் என்று ஆசையில் காத்துக்கொண்டிருக்கிறேன்”. என்றார்.
-http://www.tamilwin.com