உடல் நலக்குறைவு காரணமாக சென்னை அப்பலோ மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி தமிழக முதல்வர் ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டார்.
அனுமதிக்கப்பட்ட நாட்களிலிருந்தே முதல்வர் தொடர்பாக பல்வேறு செய்திகள் ஊடகங்களில் வந்துக் கொண்டுதான் இருக்கின்றது. குறிப்பாக லண்டன் மருத்துவரின் பரிசோதனையின் பின்னர் பல்வேறு வதந்திகள் வெளிவரத் தொடங்கின.
முதல்வர் ஜெயலலிதா இறந்து விட்டதாகவும், அப்பலோ மருத்துவமனையினர் அதனை மறைப்பதாகவும் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த தமிழச்சி வெளியிட்ட கருத்துக்களும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
அது மட்டுமன்றி முதல்வர் மூளைச்சாவு அடைந்துவிட்டதாகவும் தகவல்கள் பெருவாரியாக வெளிவரத் தொடங்கின.
சுயநினைவு இழந்த முதல்வரை பரிசோதிப்பதற்பதற்காக லண்டன் எயிம்ஸ் மருத்துவ குழுவினர், சிங்கப்பூர் மருத்துவர்கள் என பலர் வந்து சென்றமையானது ஆதரவாளர்களிடையே பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஆனால் முதல்வருக்கு ஒன்றும் ஆகவில்லை நலமாகத்தான் இருக்கிறார் என அவ்வப்போது அப்பலோ மருத்துவமனை வட்டாரங்களும் கருத்து தெரிவித்தன.
இந்நிலையில் தமிழக மக்களும் இந்திய மக்களும் முதல்வரின் நலம் வேண்டி விஷேட பிரார்த்தனைகளை மேற்கொண்டிருந்தனர். இருப்பினும் ஜெயலலிதாவுக்கு என்ன நடந்தது என்பது மர்மமாகவே இருந்து வந்தது.
மேலும், அப்பலோ வைத்தியசாலையினை அ.தி.மு.க தொண்டர்கள் முற்றுகையிட்டிருந்த நிலையில், முதலமைச்சர் விரைவில் குணமடைய வேண்டி பல்வேறு பிரார்தனைகளையும் மேற்கொண்டிருந்தனர்.
இதேவேளை கடந்த மாதம் 19 ஆம் திகதி முதல்வர் தனியான பிரிதொரு அறைக்கு மாற்றப்பட்டார்.அவ்வப்போது முதல்வரை பார்வையிட்டுவந்த அரசியல் பிரமுகர்கள் அவரின் உடல்நலம் தேறி விட்டதாகவும் விரைவில் விடு திரும்புவார் என்றும் அறிக்கை வெளியிட்டனர்.
இன்றளவில் பொலிஸார் அவசரம் அவசரமாக கூட்டங்களை நடத்துகின்றனர். மாநில அமைச்சர்கள் அப்பலோவை நோக்கி விரைந்த வண்ணம் உள்ளனர். பாதுகாப்பு படையினர் அவசரமாக அப்பலோவில் குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
இதேவேளை இன்றைய தினம் மாலை முதல்வருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதாகவும் சிகிச்சைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் வைத்தியசாலையை மேற்கோள் காட்டி அறிக்கைகள் வெளியிடப்பட்டன.
மேலும் மகராஷ்டிரா ஆளுனர் வித்தியாசாகர் ராவ் இன்று இரவு சென்னை வருவதாக வெளியான தகவல் தமிழக அரசியலிலே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் அ.தி.மு.க ஆதரவாளர்களும், பொதுமக்களும், ஜெயலலிதா ஆதரவாளர்களும் முதல்வர் எப்போது குணம் பெறுவார் என காத்து நிற்கின்றனர்.
ஆனால் உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை. இனி முதல்வர் தொடர்பாக என்ன தகவல்கள் அப்பலோவிலிருந்து வரும் என்பது கேள்விக்குரியாக உள்ள அதேவேளை, இனி அப்பலோவிலிருந்து எதுவும் வரலாம் என்பதே உண்மை.
அப்பலோவிலிருந்து உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளிவரும் வரை ஊடகங்களில் இருந்து வெளிவரும் எந்த தகவலையும் யாரும் நம்பாமல் இருப்தே நல்லது. ஏனெனில் அப்பலோவிலிருந்து இனி முதல்வர் தொடர்பான தகவல்கள் எதுவும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வர் என்ற வகையில் செல்வி ஜெயலலிதா தொடர்பான காத்திரமான முடிவுகளை பொறுப்புக்கூற இதுவரை அப்பலோத்தரப்பு முன்வரவில்லை. தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்புக்கள் இருந்தும் வைத்திய அதிகாரிகளோ மத்திய அரசோ ஏன் இந்திய அரசாங்கமும் கூட இந்திய மக்களிடத்தில் உரிய பதிலை வழங்கவில்லை.
முதல்வரின் தொடர்பில் இந்திய நாடே எதிர்ப் பார்த்திருக்கும் நிலையில் முதல்வரின் நிலையை வெளிப்படுத்தாமல் மூடி வைத்திருப்பது பல்வேறு சர்ச்சைகளையும் பல்வேறு எதிர்ப்பார்ப்புக்களையும் தோற்று வித்திருக்கின்றது.
அப்பலோவினால் தீர்க்கமான முடிவு கிடைக்கும் வரை முதல்வர் தொடர்பான தகவல் தொடர்ந்தும் வெளிவந்து கொண்டுதான் இருக்கும்.
-http://www.tamilwin.com
தமிழக மக்களே ! பிறப்பும் இறப்பும் இயற்கை.அம்மா ஜெயலலிிதாவும் ஒரு சாதாரண பெண்மனிதான். அவர் மீண்டும் திரும்பி வந்தால் நலம்.
வரவில்லையென்றால் அது இறைவனின் செயல். இதற்காக வேலை வெட்டியெல்லாம் விட்டு விட்டு கூட்டம் கூட்டமாக மருத்துவமனை முன் நின்று குய்யோ முறியோ என்று கத்தி ஆர்ப்பட்டம் பண்ணுவது அநாகரீகம் , அசிங்கம், பண்பாடற்ற செயல். உங்களை யெல்லாம் பார்த்து உலகமே சிரிக்கிறது. உலகத்தில் எத்தனயோ தலைவர்கள் பிறந்து இறந்து இருக்கிறார்கள். அவர்கள் இறந்த பொழுது அல்ல நோய்வாய் பட்ட போது இது போன்ற வெட்டியான ஆர்ப்பாடங்கள் நடைபெற்றதாகத் தெரியவில்லை. ஏன் தமிழ் நாட்டில் மட்டும் இந்த கூத்து ? ஒருவர் போனால் இன்னொருவர். அதற்காகத்தானே ஜனநாயகம் என்ற ஒன்று உள்ளது !.சிந்தியுங்கள் ! போய் வேலை வெட்டி பாருங்கள். எது நடக்கப் போகிறதோ அது நன்மைக்காவே என்று நினையுங்கள்.