தமிழகத்தின் பொருத்தமான அடுத்த முதலமைச்சர் யார் என்பது குறித்து நமது தளத்தில் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது.
இதில், எதிர்கட்சி தலைவராக இருக்கும் திமுக பொருளாளர் ஸ்டாலின், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தேமுதிக தலைவர் விஜயகாந்த், ஜெயலலிதாவின் தோழி சசிகலா ஆகியோர் முன்னிறுத்தப்பட்டனர்.
இதில் ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார், சீமான் இரண்டாம் இடத்தில் உள்ளார்.
நீங்களும் உங்கள் கருத்துகளை பதிவு செய்ய Lankasri- Facebook
https://www.facebook.com/rsrc.php/v3/y4/r/-PAXP-deijE.gif
-http://news.lankasri.com
ஏம்பா! சீமானை வம்புக்கு இழுக்கிறதே உங்களுக்கு வேலையா போச்சா?
சீமானை உசுப்பேற்றி மரண அடி வாங்க வைக்கிறதுல news.lankasriக்குத்தான் எவ்வளவு சந்தோசம்.
தமிழர் நாட்டை தமிழர் தான் ஆளனும்! வந்தேறிகள் இல்ல…
என்ன சொன்னாலும் உரைக்காத ஜென்மங்களுக்கு இப்போதைய முதலமைச்சர் தமிழன் என்பது கூடவா தெரியவில்லை.
எவன் ஆண்டாளும், பொருளாதார சீர்திருத்தம் வராத வரைக்கும், ஏழைகளுக்கு ஒன்னும் கிடைக்காது …. திரும்ப திரும்ப முடடால்களே வரக்கூடாது …. சீமானை போன்று …
கலப்படமில்லாத தமிழர் என்று யாரும் இல்லை.
எல்லோரும் மத்திய தரைக்கடலின் கிழக்கு பக்கத்திலிருந்து வந்தவர்கள்தான்.
தெலுங்கு மலையாளம் கன்னடம் சேர்த்து தான் ….
சீமானைப் போன்ற ஒருவர் முதலமைச்சராக வரும்வரை தமிழன் எல்லாத் துன்பங்களையும் அனுபவித்துத் தான் ஆக வேண்டும்! அம்மாவுக்குச் சின்னம்மாவாக இருந்தவர் எல்லாம் பதவிக்கு ஆசைப்படுவது எல்லாம் தமிழ் நாட்டில் தான் நடக்கும்!
நான் கலப்படமில்லாத தமிழன். எனக்கு ஐயாயிரம் ஆண்டு சரித்திரம் உண்டு. மத்திய தரைக்கடல் எல்லாம் எனக்குச் சொந்தமில்லை!
ஐயாயிரம் ஆண்டு பின்னோக்கி தமிழனை பற்றி ஆராய்ந்தால் கிடைக்கும் பதில் தரைக்கடலின் கிழக்கு பகுதியாகத்தான் இருக்கும்.
எந்த சீமான் வாழ்த்துக்கள் என்ற வார்த்தைக்கு மெய்யெழுத்து வருமா வராதா என திராவிடனிடம் விளக்கம் கேட்டவரா தமிழ்நாடு உருப்பிடறது திருவாங்குலத்தான் …லுதான்
நாட்டை ஆளுவதற்கு இன உணர்வு இருந்தால் போதும். மெய்யெழுத்து வருமா, வராதா என்பதைக் கலைஞரைக் கேட்டால் போதும்!
ஐயாயிரம் ஆண்டு சரித்திரம் உள்ளவனுக்கு அதற்குப் பின்னால் போனால் அவன் சரித்திரம் இன்னும் சிறப்பாகவே இருக்கும். தமிழனுக்கு ஒரே மண் தான். அது இப்போது இருக்கும் மண்! ஆதாம், ஏவாள் பிறந்த மண் இது தான் என்றும் சில ஆராய்ச்சிகள் உள்ளன!
திராவிடனிடம் தமிழ் வார்த்தைக்கு மெய்யெழுத்து வருமா வராதா என கைகட்டி-கைகூப்பி காத்திருந்தவன் எல்லாம் இன்று தமிழ் உணர்வு உள்ளவனா ? இந்த லொள்ளுதான் வேணாம்கிறேன்.
தமிழ்நாட்டை மறுபடியும் சினிமா கூத்தாடிகளுக்கு தாரை வார்க்காதீர் !
சீமான் அவர்களின் வளர்ச்சி நமெக்கெல்லாம் இனிமேல் மகிழ்ச்சிதான். மக்கள் இப்போது சிந்திக்கத் தொடங்கி விட்டார்களென்று உறுதியாகி விட்டது.
ஒரே காமிடியாக உள்ளது. சீமான் ஆடு வளப்பவர்களையும் விவசாயத்தில் உள்ளவர்களையும் அரசாங்க ஊழியர்களாக அறிவிற்பேன் என்கிறார். படித்தவர்களை, அவர்களை கொண்டு என்ன செய்வேன் என்று தூர நோக்கு சிந்தனை இல்லாமல் திரிகிறார். ஒரு காமராஜ், ஒரு mgr , ஒரு கக்கன் போன்றோரை தேர்வு செய்யாமல், உணர்ச்சி போங்க முடிவெடுப்பவர்களை ஆதரிக்கீர்கள் …. இது மடத்தனமான செயல் இல்லையா ?
தமிழ் நாட்டை யார் நல்ல முன்னேற்றத்திற்கு கொண்டு வர முடியும்? நல்ல திறமை உள்ள தமிழர் இருக்கிறாரா? லீ குவான் யு போல் பாதி திறமை உள்ள தமிழர் இருக்கிறாரா? இந்த 70 ஆண்டுகளில் யாராவது அந்த பதவிக்கு நியாயம் செய்திருக்கின்றனரா? எல்லாமே கொள்ளையும் ஊழல்களுமே- தற்போது மக்களுக்கு பணம் கிடைப்பது அவ்வளவு சிரமமாக இருக்கிறது ஆனால் சிலர்களுக்கு கோடிக்கணக்கில் புதிய தாள்கள் எப்படி கிடைக்கிறது? கடந்த தேர்தல்க்கின் பொது 570 கோடி பணம் பிடிக்கப்பட்டது ஆனால் இது வரை அதை பற்றிய செய்தி ஒன்றுமே இல்லை– சீனாவை போல் ஊழல்வாதிகளை மரண தண்டனைக்கு உட் படுத்தினால் சிறிதளவாவது நிலைமை மாறலாம்.
ஊழல் பெருகிவிட்டதனால் சீமானை ஆதரிக்கிறோம் என்பது, காமெடியிலும் காமிடி. காரணம் சீமான் எப்படி ஒட்டு மொத 70 ஆண்டுகால அரசியலைமாற்றுவார் என்று அவருக்கே தெரியாது. இதில் எப்படி ஊழலை சரி செய்ய முடியும் ? பணம் வாங்கி வாங்கி பழகியவர்கள் , மீண்டும் தி மு க வை போன தேர்தலில் எதிர் கட்சியாக கொண்டு வர வில்லையா ? விலை போகிறவர்களை திருத்தாமல் சந்தையை குறை சொல்பவர்களை இங்கே தான் பார்க்கிறேன்….
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் காமராஜர் ஆரம்பித்து வைத்த “இலவசம்” காங்கிரஸ் ஆட்சிக்கு பின் ஆண்ட திராவிட கட்சிகள் “ஊழலும்” ஒரு வகையில் இலவசம்தானே என்று மெருகூட்டி வளர்த்து விட்டார்கள். இதில் யாரை குற்றம் சொலவ்து இலவசத்தை ஆரம்பித்து வைத்தவர்களையா ? வளர்த்து விட்டார்களையா ?
சீமான் படித்த கல்வி அவரால் முடியும் என்கிறது. நான் படித்த கல்வி என்னாலும் முடியும் என்கிறது. இக்கால கல்வி முறை பற்றி எனக்குத் தெரியவில்லை!
ஐயா dhilip அவர்களே யார் ஊழல் பெருகிவிட்டதனால் சீமானை ஆதரிக்கிறோம் என்று சொன்னது? நான் அப்படி சொல்லவில்லை. தமிழ் நாட்டுக்கு யார் பெருமை சேர்க்கமுடியும்– லீ குவான் போல்? ஒன்றுமில்லா சிங்கப்பூர் இன்று முதலாம் உலகம்– இவ்வளவு பெரிய பரந்த மலேசியாவுக்கு தண்ணீர் கூட கொடுத்தது– இதுதான் அறிவியல்-புத்தி கூர்மை- எல்லாம் இருந்தும் அதை ஒழுங்காக நிர்வகிக்க தெரியாமல் கொள்ளை அடித்து தானே தின்றால் நாடு எப்படி முன்னேற முடியும்? தமிழ் நாட்டையும் மலேசியாயாவையும் சேர்த்துதான் கூறுகிறேன். சமீபத்தில் புயல் அடித்து சென்னை பட்ட துன்பத்திற்கு அங்கு என்ன ஷைத்தான்கள்? (!) கையால் ஆகாத ஈனங்கள்-மரங்களை வெட்ட கூட காய் எந்திரங்கள் இல்லாமல் பல இடங்களில் வெட்டு கத்தியில் மரங்கள் வெட்டப்பட்டன. இந்த கம்மனாட்டிகள் தினசரி தின்று மாதக்கடைசியில் சம்பளம் பெறுவதற்க்கே லாயக்கு. ஒழுங்காக எதையும் செய்ய முடியாது– ஒரு சமயம் சின்னம்மா சேலையை வரிந்து கட்டிக்கொண்டு மரங்களை வெட்டி அப்புறப்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்ல, புயல் எச்சரிக்கை தரப்பட்டபோதே மரங்களை கழித்து இருக்கவேண்டும்– வெறும் எலும்பு கூடாக இருந்திருந்தால் பல மரங்கள் இன்று நின்றுகொண்டிருக்கும் –அவ்வளவுக்கு சிந்திக்க கூடி யா திறன் இல்லாதா ஈனங்கள்– நாடு நல்ல நாடாக இருக்க வேண்டும் என்று பல அன்னியன்கள் தமிழ் நாட்டுக்கு தேவை.
சீமான் படித்த கல்வி அவரால் முடியும் என்கிறது. நான் படித்த கல்வி என்னாலும் முடியும் என்கிறது. அப்படியென்றால் காமராஜர் படிப்பறிவு இல்லாததால்தான் இலவசத்தை ஆரம்பித்து வைத்தார் என்று நக்கல் செய்வதைப்போல உள்ளது.
சீமானைமுன்பு யாருக்கு தெரியும்.எந்தபின்
புலனும் இல்லாமல் நாம் தமிழர் இயக்கத்தை
கட்டி எழுப்பி வலுவாக வளர்ந்து மற்ற கட்சிகள்
உற்று நோக்குகின்றன.தொலைக்காச்சியில்
இருட்டடிப்பு.அடுத்த நான்காண்டுகலுக்கு
பிறகெ கணிக்க முடியும்.இன்று இகழும் வாய்
புகழழாம் பச்சை தமிழன்டா.சீமானின் தம்பிகள் ஒவ்வொருவரும் முத்துக்கள்.
இன்றைய தமிழ்நாட்டின் நிலைமைக்கு காரணம் காமராஜரின் இலவசம்தான். ஆகா அருமையான காலம் கடந்த கண்டுபிடிப்பு.
தமிழ்நாட்டு அரசியலில் ஆரம்பத்தில் தமிழர்களின் நம்பிக்கை நட்சத்திரமாகவும் / முத்துக்களாகவும் அடையாளம் காட்டப்பட்டவர்கள்தான் பின்னாளில் தமிழனுக்கே பெரிய ஆப்பு வைத்தவர்கள் என்ற வரலாற்றை பார்த்து சலிப்பு தட்டி விட்டது.
மீண்டும் சீமானை வைத்து தமிழன் என்ற காமிடியெல்லாம் வேணாமாகிறேன்.
ஆயா வேலைக்கு வந்தவள் எல்லாம் நாட்டை ஆளலாம்.. சிறந்த சிந்தனையாளன் சீமான் ஆளக்கூடாதா.. நமது அடையாளமே தமிழ் மொழிதான். அதை தாய்மொழியாகக் கொண்ட சீமான் தான் தமிழ் நாட்டை ஆளவேண்டும்.
கருணாநிதியை தமிழன் என்று அடையாளம் காட்டியவன் நான்! உண்மை! அவர் தமிழனுக்குப் பெரிய ஆப்பு வைத்தார் என்பதும் உண்மை! இப்போது தான் அவர் தமிழர் இல்லை என்பதும் புரிகிறது! அதுவும் உண்மை! சீமானை வைத்து இப்போது காமடி பண்ணவில்லை. அதுவும் உண்மை! தமிழ் நாடு தலை நிமிர வேண்டுமானால் சீமான் வர வேண்டும். பன்னிர்செல்வமோ, சசிகலாவோ வந்தால் தலை குனிய வேண்டி வரும்! அதுவும் உண்மை. தமிழன் என்றால் அவனுக்கு இன உணர்வு வேண்டும். தமிழன் என்கிற இறுமாப்பு வேண்டும். தமிழுணர்வு வேண்டும். இல்லையென்றால் அவன் ஒழியட்டும்!
கூத்தாடிகளுக்கு இரண்டரை மணி நேரம் சினிமாவைபோல் தமிழ் பற்று பற்றி பேச சொல்லி கொடுக்கவா வேணும்.
இரண்டரை மணி நேரம் தமிழ் பற்று பேசும் கூத்தாடிகளை ௦ தமிழன்-தமிழ் உணர்வு உள்ளவன் ௦ என்று தாங்குவதை தமிழன் நிறுத்தினாலே போதும் பாதி முன்னேறி விடுவான்.
தமிழர்கள் என்றைக்கு கூத்தாடிகளை வைத்து ௦ தூக்கி தூக்கி ௦ படம் காண்பிப்பதை நிறுத்துகிறார்களோ அன்றுதான் தமிழர்களிடையே தமிழ் உணர்வு விழிப்புணர்ச்சிக்கு முதல் வெற்றி எனலாம்.
ஐயா நேத்ரா
ஆயா வேலைக்கு வந்தவள் எல்லாம் நாட்டை ஆளலாம்.. சிறந்த சிந்தனையாளன் சீமான் ஆளக்கூடாதா என்று கேட்கிறீர்கள்.
அன்றுதொட்டு இன்றுவரை தமிழ்நாட்டு அரசியல் தமிழ் நாட்டு மக்களுக்கு சொல்லி கொடுத்த பாடம் ௦ தெரியாத தேவதையை விட தெரிந்த சாத்தானே மேல் ௦ என்று அவரவர் வேலையை பாருங்கள் என்பதுதான் அதைத்தான் தமிழ் நாட்டு மக்களும் தவறாமல் கடை பிடித்தும் வருகிறார்கள்.
பன்னிர்செல்வமோ, சசிகலாவோ, சீமானோ அல்லது வரும்காலத்தில் வெளிவர இருக்கும் தமிழ் சீர்திருத்தவாதிகளோ எவராயினும் தமிழக அரசியல் சாக்கடையில் கலந்து விட்டால் ௦ பன்றியொடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் ௦ கதைதான்.
நல்ல திறமை உள்ள தமிழன் தேவை–என்னைப்பொறுத்தமட்டில் தமிழ் உணர்வு உள்ள நல்ல திறமைசாலி தமிழ் நாட்டுக்கு வஞ்சகமில்லாமல் உழைக்கும் யார் இருந்தாலும் சரிதான்– ஆனால் நம்பமுடியுமா? கருணாநிதி தமிழன் இல்லையா? ஆனாலும் தமிழுக்கு கருணாநிதியின் அளிப்பு மதிக்கக்கூடியது. நாம் நன்றி மறக்கக்கூடாது— ஆனாலும் ஈழத்திற்கு இழைத்த துரோகத்தையும் மறக்க வில்லை.
Anonymous V அன்றுதொட்டு இன்றுவரை தமிழ்நாட்டு அரசியல் தமிழ் நாட்டு மக்களுக்கு சொல்லி கொடுத்த பாடம் ௦ தெரியாத தேவதையை விட தெரிந்த சாத்தானே மேல் ௦ என்று…
பன்னிர்செல்வமோ, …எவராயினும் தமிழக அரசியல் சாக்கடையில் கலந்து விட்டால் ௦ பன்றியொடு சேர்ந்த கன்றும் மலம் தின்னும் ௦ கதைதான்.
உங்கள் கருத்துப்படிதான் தமிழ் நாட்டு அரசியல் இருக்கிறது என்பதுதான் உண்மை.
நிறுத்துக்கப்பா உங்களுடையே மொழி பட்றையும் ! இன பட்றையும் ! இங்கு வாய்ப்புக்களும் , வசதிகளும் இருந்தும் ! மலேசிய தமிழன் உருப்பட முடியவில்லை ! தமிழ் நாட்டு அரசியல் நமக்கு தேவையா !!
மலேசியாவில் தமிழன் என்று கூறிக்கொள்பவர்கள் பத்துபேரில் பேரில் இரண்டு அல்லது மூன்று பேர் கலப்படமில்லாத தமிழனாக இருப்பார்களா என்பதே சந்தேகமாக இருக்கும்போது அடுத்தவனை தமிழனில்லை என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது.
அம்மா காலில் விழுந்த மானம் கேட்ட தமிழ் நாட்டு மந்திரிகள் ! சின்னம்மா காலில் விழுந்துடானுங்க ! சீமானாவது !! ஸ்டாலின் ஆவது !! தமிழ் நாடு உறுப்படுவது என்பது ??? மலேசிய தமிழனாவது மானமுள்ள தமிழனாக வாழ முயற்சிப்போம் !!
மலேசியாவில் தமிழன் பத்துபேரில் பேரில் இரண்டு அல்லது மூன்று பேர் கூட தமிழனாக இருக்க முடியாது என்று கூறுகிறீர்களா ?
அட கடவுளே ! மலேசிய கலப்பட தமிழன்தான் தமிழ்நாட்டு தமிழனை தமிழனா இல்லையா என்பதை முடிவு செய்கிறானா ?
என்ன கொடுமை பார்த்தீர்களா Anonymous !
சிறிலங்கா,கேரளா,கன்னடா,ஆந்திரவிடம் இழந்த அனைத்து நிலங்களுடன் தனி தமிழர் நாடு ஒன்றே தீர்வு! தமிழர் நாடு தமிழர் ஆட்சி!!!
தமிழன் என்று சொன்னால் ஜாதியால் பிளவுபடுகிறான் !
திராவிடன் என்று சொன்னால் பகுத்தறிவால் ஒன்றுபடுகிறான் !
அதனால் தமிழ்நாடு, கேரளா, கன்னடா, ஆந்திரா அனைத்து நிலங்களுடன் மீண்டும் திராவிட நாடு ஒன்றே முழுமையான தீர்வு !
வாழ்க திராவிடர் ஆட்சி !!! வளம்பெருக திராவிட நாடு !!!
திருட்டு திராவிடன் அடக்கி வாசிக்கவும்! ஒன்றே குலம் ஒருவனே தேவன்! தமிழர் நாடு தமிழர் ஆட்சி!!!
திராவிடன் என்று சொன்னால் பகுத்தறிவால் ஒன்று படுகிறான்! காரணம் அவனிடம் நாயுடு, ராவ், ரெட்டி, பிள்ளை, மேனன், நாயர் என்று சாதி முறைகள் எதுவும் இல்லை!
ஒன்றே குலம் ஒருவனே தேவன்!
இதுவும் திராவிடன் சொல்லி கொடுத்ததுதான் என்பதை மறந்து விட்டீர்போலும்.
தமிழை பகடைக்காயாக பாவித்து தமிழுக்கு அவமானத்தை ஏற்படுத்த முயலும் இனவெறி கூட்டமே உன் ஜம்பம் என்றும் பலிக்க போவதில்லை.
வாழ்க திராவிடம் !
வளர்க திராவிடர் இனம் !
வளம்பெரும் திராவிட நாடு !!!
நானும் ஒருகால கட்டத்தில் திராவிடன் என்று எண்ணி இருந்தேன் ஆனால் நாம் மட்டும் தான் திராவிடன் பற்றி பேசுகிறோம் ஆனால் மற்ற வர்கள் அதைப்பற்றி பேசுவதில்லை. இப்போது தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது? தெலுங்கர்கள் கன்னடர்கள் மலையாளீகள் தமிழ் நாட்டையே சூறை ஆடிவிட்டனர்– தமிழர்கள் சப்பிக்கொண்டிருக்கின்றனர்– இதைஇ விட வேறு என்ன கேவலம் வேண்டும்?
திராவிட சித்தாந்தத்தின் ஆதி மனமாம் தமிழ் மனம் இருக்கும் பொழுது, மாற்று மனத்தை எங்கே நிந்திக்கும் ,ஆதிமனம் அல்லோல படுகின்றது என்றால்,அந்தமனம் கசக்குமா ,திராவிடத்தின் தலைமை மொழி ஓசை,ஒலி ஓசையாக ஒலிக்கும் வரை ,எங்கே திராவிடம் வீழும் ,எங்கே திராவிடம் மாறும் ,ஆதி மறந்து ,அந்தம் பேசினால் ,அடிப்படை மாறுமா ,தமிழ் மொழியின் மொத்த உருவமே திராவிடம் திராவிடம் தானே .
திராவிடம் எனும் சொல்லை கேரளா .ஆந்திரா கன்னட மாநிலங்கள் இன்றுவரை மதிப்பதில்லை .தமிழனை திராவிடனாக ஏற்பதில்லை .மூன்று மாநிலங்களும் தமிழகத்திற்குள் வரும் மூன்று நதிகளையும் தடுத்து நிறுத்த முனைகின்றன .தமிழக மக்களின் நலனில் துளியும் அக்கறை இல்லை .திராவிடன் என்ற சொல்லும் சாதி என்ற சொல்லும் தமிழினத்தின் அகராதியில் இருந்து முற்றிலும் நீங்கினால் l தமிழினம் உருப்படும் .
திராவிடன் என்று ஒரு இனமில்லை. அதை மலையாளியோ, தெலுங்கனோ, கன்னடனோ ஏற்றுக்கொள்ளவில்லை. அப்படியிருக்க தமிழன் ஏன் அதை பிடித்துக்கொண்டு தொங்கவேண்டும்
‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என் முப்பாட்டன் திருமூலர் கொடுத்தது…சினிமா பாடல் அல்ல! உன் பொய் மூட்டையை உன்னோடு வச்சிக்கோ!!!
ஐயா udayakumar அவர்களே நம் பழம் பெருமை பேசி சாதித்தது ஒன்றுமில்லை. தயவுசெய்து இன்றைய நிலையை கவனிக்கவும். நாம் தான் அதல பாதாளத்தில் இருக்கிறோம். சுண்டக்காய் சிங்களவன் தினசரி தமிழர்களை அடித்தும் உதைத்தும் அவர்களின் வாழ்வாதாரத்தை நாசப்படுத்தியும் கேட்க நாதி இல்லை- அங்கு என்ன நடக்கிறது என்றே புரிய வில்லை– அப்பட்டமாக கோடிக்கணக்கில் கொள்ளை அடித்தும் ஒன்றும் தெரியாமல் இன்னும் தலையை மண்ணில் புதைத்து வைத்துக்கொண்டிருந்தால் எப்படி முன்னேற முடியும்? மற்றவர்கள் என்று நம்மை மதிப்பார்கள்?
ஐயா irama thanneermalai அவர்களே உண்மை உண்மை. உண்மைக்குத்தான் மதிப்பில்லையே?
நாகர்களும்,திராவிடர்களும்ஒரே இனத்தவரகளே என்ற உண்மையை மூடிமறைக்க கூடாது நாகர்கள் என்பது இனம்
அல்லதுகலாச்சாரப் பெயர் திராவிடர் எனபது
மொழியின்அடிப்பபடையில் அமைந்த அவர்களது பெயராகும்.படிப்படியாக நகர்ந்தவர்கள்.நாகர்கள்.தெல்காப்காப்பியம்.
திருக்குறல்போன்ற வற்றில் திராவிடர் என்ற
இல்லையே.திருநாவுக்கரசர்.ஆரியன் கண்டாய் தமிழன் கண்டாய் என்றே பாடியுள்ளார்.திராவிடம் பிற்காலத்தில் எற்ப்பட்டதாகும் .மு.வ.!
சசிகலா முதல்வரானால் அப்படி என்ன பெரிய அபச்சாரம்?
நான் பலமுறை திரும்பத் திரும்ப சொல்ல்லிக்கொண்டு இருக்கிறேன். வெள்ளைக்காரனும், பார்ப்பனர்களும் நம்மை ஆள யார் காரணம் என்றால்.. இந்த மூளையில்லாத திராவிட இனம்தான்.
80 ஆரம்பத்தில் ஜெயலலிதா கொ ப செ ஆனபோது அவர் முதல்வராவர்னு யாருமே நினைக்கவில்லை. ஜெயலலிதான் என்றால் “அர்ரொகண்ஸ்”. படித்த கலக்டரை மதிப்பதில்லை. என்ன திமிர் இந்த நடிகைக்குனுதான் நம்மாளு சொல்லிக்கொண்டு அலைந்தான். இன்னைக்கு “அம்மா அம்மா” னு இவனுக ஒரு பக்கம். “ஈழத்தாய்”னு இன்னொரு பக்கம். ஆளாளுக்கு இவர் இல்லைனா தமிழ்நாடே அழிஞ்சிடும் என்பதுபோல் வெக்கமே இல்லாமல் ஒப்பாரி வச்சுக்கிட்டு அலைகிறானுக திர்ராவிட அன்னக்காவடிகள்.
நடிகையாக இருந்தால் என்ன? காலேஜ் டிக்ரிகூட வாங்கவில்லைனா என்ன? அவர் பார்ப்பனர். வெள்ளையா இருக்கார்? நம்மள மாதிரியா? நம்ம அம்மா அக்கா தங்கை. மனைவி போல் கருப்பாவா இருக்காரு? ஆங்கிலம் என்னமாப் பேசுறாரு? இதுதான் இந்ந்த திராவிட கைக்கூலிகளின் சிந்தனை ஓட்டம்.அவரு எப்படி அரசியல் பண்ணினாரு? பணம் கொடுத்து ஓட்டு வாங்கித்தானே? இல்லையா? பொய் சொல்லாதீங்கடா நாய்களா! பார்ப்பனர் ஜெயலலிதா உங்களை எல்லாம் பிச்சை எடுக்க வைத்தார். டாஸ்மாக்கை திறந்து போட்டு அதில் வரும் பாவப் பணத்தை, அரசாங்க வருமானத்தை வச்சு உங்களுக்கு பிச்சை போட்டார். தமிழ்நாட்டையோ தமிழர்களையோ சுயமரியாதையுடன் வாழ வைக்க ஒண்ணும் கிழிக்கவில்லை. முட்டாள்களுக்கு என்ன தேவையோ அதை வழங்கினார்! அம்புட்டுத்தான்.
சசிகலா வளர்வதில் என்ன பிரச்சினை. முதல்வரானால்? ஆத்தாடீ! அவர் முக்குலத்தோர் வகுப்பைச் சேர்ந்தவர். முக்குலத்தோர்கள் ஆண்ட பரம்பரைனு சொல்லிக்கொண்டு மற்றவர்களை மதிக்காதவர்கள். அதனால் தலித்கள். வன்னியர்கள், மேலும் பல சாதியினர் அவரை முதல்வராகவோ தலைவராகவோ ஏத்துக்க மாட்டோம். யாராவது பார்ப்பனர்னா பரவாயில்லை. இல்லை ஒரு மலையாளி, இல்லைனா ஒரு ஆந்திராக் காரன் இப்படி யாராவது ஆண்டால் பரவாயில்லை. நம்ம திராவிட இனம், அதுவும் ஆதிக்க சாதியினர் ஆளக் கூடாது என்பதுதான் பிரச்சினை.
ஒண்ணு தெரிந்து கொள்ளுங்கள். சசிகலா முதல்வராகி, அவர் பதவி நீடிக்கணும்னா, எல்லா சாதிக்காரனையும் ஒழுங்காக தன் சாதிபோல் நடத்தவில்லை என்றால் அவர் ஆட்சி நாளு நாள்க் கூட நிலைக்காதுனு அவருக்கு இன்னுமா தெரியாது?
ஒரு பார்ப்பான்ரல்லாத தமிழச்சி, தமிழரை ஆளட்டுமே? அதென்ன அப்படி ஒரு அபச்சாரம்? நன்றி வருண்
கலப்பட தமிழன் என்று கூறியதற்கு உண்மையான தமிழன் என்பவன் யார் ? என்பதற்கு தமிழன் விடை காண முயற்சி செய்து கொண்டிருக்கும்போது, திடீரென திராவிடர் இனம் என்றொரு குண்டை போட்டு தமிழனை நன்றாகவே குழப்பி விட்டிருக்கிறீர்கள் Anonymous !
இந்தியாவில் சாதி சான்றிதழை சார்ந்துதான் அரசாங்க ஒதுக்கீடுகள் அமைகிறது அப்படியிருக்கையில் சாதி என்ற சொல்லை தமிழ் அகராதியில் இருந்து முற்றிலும் நீக்கினால் இழப்பு தமிழினத்துக்குத்தான்.