மதுவிலக்கால் சாலை விபத்து 19% குறைந்துள்ளது: நிதிஷ் குமார்

nitishkumarபாட்னா: பீகாரில் நடைமுறைப்படுத்தப்பட்ட மதுவிலக்கால், கடந்த 7 மாதங்களில் சாலை விபத்து 19 சதவீதம் குறைந்துள்ளது என அம்மாநில முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்தார்.

பதிலடி :

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது: தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள, மதுக்கடைகளுக்கு சுப்ரீம் கோர்ட் தடை விதித்துள்ளது. மேலும், தற்போது வழங்கியுள்ள லைசென்ஸ்களை, 2017 மார்ச்சுக்கு பின் புதுப்பிக்கக் கூடாது எனவும், அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. சுப்ரீம் கோர்ட்டின் இத்தடை உத்தரவு வரவேற்கத்தக்கது. மாநிலத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட போது என்னை விமர்சித்தவர்களுக்கு இத்தீர்ப்பு, சரியான பதிலடி.

 விபத்து குறைவு :

பீகாரில் மது விலக்கு அமல்படுத்தப்பட்ட பின், ஏப்.,1 முதல் நவ.,30 வரையிலான 7 மாத காலகட்டத்தில், மாநிலத்தில் சாலை விபத்து 19 சதவீதம் குறைந்துள்ளது. விபத்துக்களால் பலியானவர்களின் எண்ணிக்கையும் 31 சதவீதம் குறைந்துள்ளது. மக்கள் மதுவுக்கு செலவிடும் தொகையை பால், இனிப்புகள், உடைகள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் வாங்க செலவிடுகின்றனர். இதனை உறுதி செய்யும் விதமாக அவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

-http://www.dinamalar.com

TAGS: